Thursday, May 28, 2009

தியானம் செய்வது எப்படி?

பசுமையான மரங்கள் நிறைந்த மலைப்பகுதி....

விலங்குகள் அற்ற வனப்பிரதேசமான அங்கே அடிவாரத்தில் ஒரு குகை..

தியானத்திற்காக அங்கே மூன்று ஞானிகள் உட்கார்ந்திருந்தனர்.
மூவரும் குகையின் வாயிலை நோக்கி அமர்ந்திருந்தார்கள்.



குகையின் வெளிப்பகுதியில் குதிரையின் குழம்படி ஓசை கெட்டது...

சராலென... ஒரு குதிரையில் பயணித்த மனிதன் குகையைக் கடந்தான்...

மூன்று ஞானிகளும் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தனர்..

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

மூன்று ஞானியரில் ஒருவர் கூறினார்...”அந்த குதிரை வெள்ளை என நினைக்கிறேன்...”

அங்கே பூரண அமைதி...

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

இரண்டாவதாக இருந்த ஞானி கூறினார் .. “இல்லை இல்லை.. அந்த குதிரை கருப்பு நிறம் தான்.. ”

அங்கே பூரண அமைதி...

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

மூன்றாம் ஞானி கூறினார்... “ இப்படி இடைவிடாமல் பேசினீர்கள் என்றால் எப்படி தியானம் செய்வது ? நான் இருக்க வா போகவா?” என்றார்..

---------------------------ஓம்-----------------------------------------------

தியானம் என்பது கண்கள் மூடி அமர்ந்திருப்பதில்லை; மனம் மூடி அமர்ந்திருப்பது என பலருக்கு தெரிவதில்லை.

மெளனம் எனும் பெருவெளியில் உன்னதமான சக்தியின் மேல் பயணிப்பது தியானம் என கூறி ஒரு மொழியின் சிதறுண்ட எழுத்துக்களால் தியானத்தின் தன்மையை சிதைக்க முயல விரும்பவில்லை.

தினமும் பல மணி நேரம் தியானம் செய்கிறேன்.... தியானத்தில் இருக்கும் பொழுது எனக்கு ஒரு காட்சி புலப்பட்டது என பலர் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். நீங்களும் கேள்விப்படலாம்.

தியானம் செய்யும் ஒருவன் நேரத்தை நோக்கியும், ஒரு காட்சியாலும் கவனிக்கப்பட்டால் அங்கே அவனுக்கு விழிப்பு நிலை உண்டு என அர்த்தம். அது தியானம் ஆகுமா?

தியானத்தில் மன எண்ணங்களே இல்லை என கூறுபவர்கள் உண்டு. மன எண்ணமே இல்லை என்பதை பார்த்தவர் யார்? மன எண்ணம் இல்லை என்பதே ஒரு எண்ணம் தானே?

தியானம் என்றால் தியானம் + தியானிக்கபடுவது+தியானி இவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பது என்றார்கள் ஞானிகள்.

தியானம் எப்பொழுது செய்யவேண்டும்? அந்த வார்த்தையிலேயே இருக்கிறது விடை. “யா” எனும் எழுத்தை எடுத்து விடுங்கள்.

13 comments:

ஆ.ஞானசேகரன் said...

//தியானம் எப்பொழுது செய்யவேண்டும்? அந்த வார்த்தையிலேயே இருக்கிறது விடை. “யா” எனும் எழுத்தை எடுத்து விடுங்கள்.//

மிகவும் கவனித்து உணர்ந்தேன் ஐயா...

யூர்கன் க்ருகியர் said...

:)நன்றி

எம்.எம்.அப்துல்லா said...

aaha :)

Anonymous said...

வார்த்தை விளையாட்டு அருமை.
நன்றி.

pudugaithendral said...

ரெய்கி கற்ற பொழுது குண்டலினி தியானமும் கற்றேன்.

ஆழ்நிலையில் மனம் பரமானந்தமாய் இருக்கும். ஆனால் சில அனுபவங்கள் எனக்கு பயம் தருகிறது. சில பிம்பங்களைக் காணக்கிடைக்கிறது. சில சமயம் ஏதோ கூறுவது போல் இருக்கிறது. இது எந்த நிலை? கொஞ்சம் சொல்லுங்களேன்.

என் ரெய்கி குருவிடம் கேட்டால் u r experience are spiritual go ahead என்கிறார்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஞானசேகரன்,

திரு ஜுர்கேன் க்ருகேர்,

திரு அப்துல்லா அண்ணே..

திரு அனானி

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி புதுகைத் தென்றல்,

ரெய்கி / குண்டலினி என்ற பெயரில் கற்றுக்கொடுக்கப்படும் தியான முறைகள் மனதை மேலும் ஒரு கற்பனை உலகிற்கு கொண்டுசெல்லவே பயன்படுகிறது.

தியானிக்கும் பொழுது என்ன ஏற்படும் என கூறுவது சிரமம். காரணம் அங்கே காண்பவர் - காட்சி - காணப்படுவது என அனைத்தும் ஒன்றாகிவிடும். மனம் என்ற வஸ்து அங்கே இருக்காது.

நீங்கள் ஆரம்ப கட்ட தியான பயிற்சியில் இருந்து “சக்கிரங்கள்” எனும் மாய விஷயத்தில் உங்கள் மனதை லயம் செய்ததால் அலைபாய்ந்த மனது லயம்பட்ட ஆனந்தம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தியானத்தை சரியான குருவிடம் கற்று மேம்படுங்கள். காட்சிகள் உங்களை வளப்படுத்தாது..

udhayakumar said...

பதிவு மிகவும் அருமை. தங்கள் சேவை தொடரட்டும். இறைவனை வேண்டிகொள்கிறேன்.

சுரேகா.. said...

//தியானம் எப்பொழுது செய்யவேண்டும்? அந்த வார்த்தையிலேயே இருக்கிறது விடை. “யா” எனும் எழுத்தை எடுத்து விடுங்கள்.//

அற்புதம்...கலக்குறீங்க ஸ்வாமி!

உங்கள் பதிவுகளில்..கடைசி வரிக்காக காத்திருக்கலாம்!
கண்டிப்பாக விருந்து உண்டு!
:)

meenamuthu said...

நீங்கள் இங்குள்ளது எவ்வளவு நன்மை!

Anonymous said...

UNGALUDAIYA " DHIYANAM EPPOZHUTHU SEIYA VENDUM " ANDHA VARTHAYILEYE PATHIL ERUKIRATHU.. ENDRA UNMAIYAI NADRAGA VILAKINEERGAL IYYA...

UNGAL ARIVUKU ALAVE ELLAI PONGAL.... ETHU POL NAN INNUM NIRAIYA ETHIR PAKKUREN IYYA... NAN DHINAMUM DHIYANAM SEIGIREN IYYA.. MANATHU MIGAVUM AMAITHIYAGA ULLATHU IYYA...

Abdul Rahman said...

I want to join one ashramam in chennai.If you know then suggest to me.

N. Ramakrishnan said...

Excellent Explanation. தியானம், தினம் செய்ய வேண்டும். உயிருள்ளவரை