இளஞ்சூரியன் தனது கதிர்களை சுருக்கிக்கொண்டிருக்கும் மாலை வேளை. தனது சிஷ்யர்களுடன் பயணப்பட்டு கொண்டிருந்தார் பிரபுலிங்கா எனும் ஞானி.கோகர்ணம் எனும் அழகிய நகரத்தை அடைந்தார்கள். 
கடற்கரையோரம் அமர்ந்து சிஷ்யர்களுடன் சத்சங்கமித்தார் ஞானபுருஷர். தனது சிஷ்யர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவரிடமிருந்து விரிவானதும் ஆழமானதுமான பதில்கள் வெளி வந்தவண்ணம் இருந்தது.
அவரின் முதன்மை சிஷ்யன் பணிவுடன் அவர் முன்வந்து கேள்வி கேட்க துவங்கினான்..
“சத்குரு பல சித்துகள் கைவரப்பட்ட சித்தர் கோரக்நாத் இந்த ஊரில் வாழ்ந்து வருகிறார். அவரின் ஆன்மீக நிலைக்கும் உங்கள் ஆன்மீக நிலைக்கும் என்ன வித்தியாசம்?”
“அனந்தா... எனக்கு எப்படி அவரின் நிலை தெரியும்? ”...தனது உடலை சுட்டிகாட்டி தொடர்ந்தார் ஞானி, “...இதற்கு இதை தவிர அன்னியமான வஸ்து கிடையாது”.
சிஷ்யனுக்கோ அவரின் பதில் திருப்தியை கொடுக்கவில்லை. குருவுக்கு தெரியாமல் சித்தர் கோரக்நாதை சந்தித்து தனது குரு சொன்ன கருத்துக்களை கூறினான்.
எனது அருமை தெரியாமல் உனது குரு அவ்வாறு கூறி இருக்கலாம். நாளை அவர் இருக்கும் இடத்திற்கு நான் வந்து சந்திக்கிறேன். அப்பொழுது அவர் என்னை பற்றி அவர் மட்டுமல்ல அனைவரும் புரிந்துகொள்வீர்கள்” என்றார் கோரக்நாத் சித்தர்.
அதிகாலை நேரம் தனது சிஷ்யர்களுடன் தியானத்தில் இருந்தார் ஞானி பிரபுலிங்கா... சித்தர் அவரின் இருப்பிடத்திற்கு வந்தார்...
கண்களை திறந்து பார்த்த ஞானி அவரை வரவேற்று அமரவைத்தார்.அவர் வந்த காரணத்தை கேட்டார்.
“எனது பெயர் கோரக்நாத், என்னை பற்றி தெரியாது என உங்கள் சிஷ்யர்களிடம் சொன்னீர்களாமே? என்னை பற்றி கூறவே வந்திருக்கிறேன். அஷ்டமா சித்தியை கைவரப்பட்டவன் நான். எனது உடலை காயகல்பமாக்கி இருக்கிறேன்...” என கூறியவாரே தனது இடுப்பில் வைத்திருந்த வாளை எடுத்து தனது மார்ப்பில் குத்தினார்....
அனைத்து சிஷ்யர்களும் அந்த பயங்கரமான செயலால் அதிர்ச்சி அடைந்து எழுந்து நின்றார்கள்...
ஆனால் கோரக்நாத் கையில் இருந்த வாள் வளைந்து போயிற்று. அவர் உடல் காயகல்பம் ஆனதால் வாளைவிட கடினமாக மாறியிருந்தது.
கோரக்நாத் ஞானி பிரபுலிங்காவை பெருமையுடன் பார்த்தார்...அவர் பார்வையில் உன்னால் இதுபோல முடியுமா என்று கேட்பது போல இருந்தது.
தனது சிஷ்யர்களிடம் வாள் கொண்டு வர சொன்னார். அதை கோரக்நாத்திடம் கொடுத்து தனது உடலில் பாய்ச்ச சொன்னார்....
முழுவேகத்துடன் வாள் வீசினார் கோரக்நாத்.... வாள் பிரபுலிங்காவின் உடலில் புகுந்து மறுபுறம் வெளியே வந்தது...
மெல்ல வாளை சுழற்றினாலும் காற்றில் சுழலுவதை போல சுழன்றது...அவர் உடல் அங்கு இருந்தாலும் வாள் அதை தொட முடியவில்லை...
ஞானி பிரபுலிங்கா மெல்ல புன்புறுவலுடன் கூறினார்....”சித்த நிலை என்பது உனது சித்தத்துடன் நின்றுவிடுவது...ஞான நிலை என்பது நான் எனும் அகந்தையை வேறுடன் எடுத்து சித்தத்தை கடந்து சுத்த வெளியில் இருக்கும் தன்மை... ஒருவன் ஞானம் அடைந்ததும் ஆகாசத்தை போல ஆகிவிடுகிறான்..அவனை எதுவும் தடுக்கவோ அசுத்தப்படுத்தவோ முடியாது...ஞானி எல்லை அற்றவன்...சித்தன் உடல் எனும் எல்லைக்கு உட்பட்டவன்..”
சித்தர் கோரக்நாத் ஞானியின் கால்களில் பணிந்தார்...தனக்கு ஞானத்தை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்...
சத்குரு பிரபுலிங்கா பிரம்ம சொரூபத்தை அவருக்கு அளிக்கதுவங்கினார்...
----------------ஓம்---------------
ஆன்மீகத்தை தேடிவரும் பக்தர்கள் அனைவரும் சரியான பாதையில் செல்வதில்லை.
ஞானத்தை தேடாமல் சிலர் காட்டும் போலி வித்தையில் மதிமயங்கி மாயத்தில் விழுகிறார்கள்.
வாயிலிருந்து லிங்கம் எடுப்பவருக்கும் , கடன் தொல்லை நீங்க தீட்சை தருகிறேன் என விளப்பரம் செய்பவர்களிடம் செல்லும் மக்கள் உண்மை நிலையை விளக்கும் ஞானிகளிடன் செல்வதில்லை. அந்த ஞானி சமாதி அனதும் அவர் சமாதியில் தூமம் காட்டும் இழிநிலையிலேயெ இருக்கிறார்கள்..
உள்ளத்தில் உள்ளே உளபல தீர்த்தங்கள் என திருமூலர் கூறியவாக்கை கருத்தில் கொண்டு பிரம்ம ஞானத்திற்கு பாடுபடுவோம்...
குகன் எனும் ஒரு பாமர விவசாயி வாழ்ந்துவந்தான் . சிறிதளவு படிப்பறிவு இருந்ததால் பல ஆன்மீக புத்தகங்களை படித்தான். அதன்விளைவாக தனக்கும் ஆன்மீக ரீதியான முன்னேற்றம் ஏற்பட்டு முக்தி அடையவேண்டும் எனஎண்ணினான். அந்த ஊரில் உள்ள கோவில் அர்ச்சகரை அணுகி ஆன்மீகவாழ்க்கைக்கு என்ன செய்யவேண்டும் என விசாரித்தான்.
"நீர் நல்ல அதிர்ஷ்டகாரந்தானையா ... பக்கத்தூரில் ஸ்ரீ-ல-ஸ்ரீ பக்தானந்தா ஸ்வாமிகள் அவர்களே விஜயம் பண்ணிருக்கார் . அவர்கிட்ட போன மந்திரஉபதேசம் செய்வார். அதை ஜபிச்ச போதும் உனக்கு எல்லாம் கிடைக்கும். சுவாமிகோபக்காரர் , சுவாமிகள் கிட்ட போகும்போது பவ்யமா அடக்கமா போகணும். உபதேசம் வாங்கறதுக்கு பதிலா சாபம் வங்கிடாதே சரியா? "..என கூறியஅர்ச்சகரை பார்த்து நன்றி கூறிவிட்டு பக்கத்து ஊருக்கு பயணமானான்.
குகன் எதிர்பார்த்ததை விட அங்கு மக்கள் கூட்டம் கடல் போல திரண்டிருந்தது. தனது வீட்டில் விளைந்த சிறிய மாம்பழங்களை கணிக்கையாக கொடுக்க எடுத்துவந்திருந்தான். சுவாமிகளை நெருங்க முடியுமா என சந்தேகம் கொள்ளும்வண்ணம் மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்தது. பலமணிநேரம் காத்திருந்தான், சுவாமிகளை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.
சுவாமிகளின் குளத்தில் குளித்து விட்டு பூஜைக்கு வரும் வழியில் கூட்டம்குறைவாக இருப்பதை கண்டு வேகமாக தரிசிக்க ஓடினான். சுவாமிக்கு அருகில்வரும் சமயம் குகன் கால் தடுக்கி சுவாமிகளின் பாதத்தில் விழுந்தான். மாம்பழங்கள் திசைக்கு ஒன்றாக பறந்தன...
அதைகண்டு திடுக்கிட்ட சுவாமிகள், சினம் கொண்டு "தூர போ " எனஆத்திரத்துடன் காலால் அவனை எட்டி உதைத்தார்.
வெள்ளை மனம் கொண்ட குகன், சுவாமி தனக்கு உபதேசம் அளித்துவிட்டார் எனநம்பினான். தன்னை காலால் தொட்டு ஸ்பரிச தீட்சை கொடுத்ததாகவும் "தூரப்போ" என்ற மந்திரம் கொடுத்ததாகவும் முடிவுசெய்து யாரும் தொந்திரவுசெயாதவண்ணம் வனத்தில் சென்று தவம் இருக்க துவங்கினான்.
பல வருடங்கள் கடந்தது...
ஒருநாள்....வனத்தில் ஒரு இடத்தில் கரையான் புற்றுக்கு உள்ளே இருந்துதொடர்ந்து ...'தூரப்போ" எனும் மந்திர ஒலி கேட்டவண்ணம் இருந்தது.
திடீரென தனது உடலில் ஏற்பட்ட அதிர்வால் கரையான் புற்றை உடைத்துகொண்டு வெளிப்பட்டார் ஒரு முனிவர்.
'தூரப்போ" எனும் மந்திரம் அவருக்கு ஸித்தி ஆயிருந்தது. தனது உடலை நீட்டி சரி செய்து நடக்க துவங்கினார். வழியில் காட்டு மரம் ஒன்று வேருடன் விழுந்துபாதையை மறைத்துக்கொண்டிருந்தது.
பிரம்மாண்டமான அந்தமரத்தை கூர்ந்து பார்த்து கூறினார் "தூரப்போ..."
பல யானைகள் கட்டி இழுக்க வேண்டிய அந்த மரம், அவரின் ஒரு சொல்லுக்குகட்டுப்பட்டது போல பல அடிதுரம் தூக்கி எறியப்பட்டது.
தனது மந்திரம் வேலை செய்வதை உணர்ந்தார் குகன் எனும் மாமுனி.
கட்டிற்கு அருகில் இருக்கும் ஊருக்கு பயணமானார். அங்கு எளிமையாக தனதுவாழ்கையை அமைத்து கொண்டார்.
யார் வந்து தனது கஷ்டத்தை கூறினாலும் , அந்த கஷ்டத்தை மனதில் நினைத்து ஒருமுறை தனது மகாமந்திரத்தை ஜெபிப்பார்...."தூரப்போ" உடனடியாகஅவர்களின் கஷ்டம் விலகிவிடும்.
நோயுற்றவர்கள் வந்தால் நோயை நினைத்து .."தூரப்போ" என்றதும் உடனடியாககுணமடைவார்கள். மெல்ல தூரப்போ சுவாமிகளின் புகழ் பரவ ஆரம்பித்தது.
வயது முதிர்த நிலையில் ஒரு துறவி துரப்போ சுவாமிகளை பார்க்க தனதுசிஷ்யர்களுடன் வந்திருந்தார். தனக்கு உடல் முழுவதும் ஒருவித ரோகம்வந்திருப்பதாகவும், துரப்போ சுவாமிகளின் சக்தியை கேள்விப்பட்டு வந்ததாகவும் தன்னை குணப்படுத்தவேண்டும் என வேண்டினார்.
முதிர்ந்த துறவியை கண்ட துரப்போ சுவாமிகளின் எழுந்து அவரின் கால்களில்விழுந்தார். "....மகா குரு ஸ்ரீ-ல-ஸ்ரீ பக்தானந்தா சுவாமிகள் அவர்களே நீங்கள் தான் எனது குரு. உங்கள் உபதேசத்தால் தான் இந்த சக்தி கிடைத்தது. நீங்கள் வேண்டுவதா? கட்டளை இடுங்கள் உங்கள் சிஷ்யன் நான் உடனேசெய்கிறேன் என்றார்.." துரப்போ சுவாமிகளின்.
தனது மந்திரத்தை மீண்டும் மனதில் நினைத்து குருவை பார்த்தார். அவர் உடலில்உள்ள ரோகம் நீங்கியது.
பக்தனந்த சுவாமிகளுக்கு ஒரே குழப்பம், இவருக்கு நாம் உபதேசித்தோமா எனசந்தேகம் கொண்டு துரப்போ சாமிகளிடம் கேட்டார்.
தனக்கு நேர்ந்த அனுபவங்களை கூறினார் துரப்போ சுவாமிகள்.
தனது ஆணவத்தாலும் கோபத்தாலும் தவறு நடந்ததை உணர்த்த பக்தனந்தசுவாமிகள் ...."துரப்போ சுவாமிகளே எனது அலட்சியத்தாலும் ஆணவத்தாலும் அன்று உங்களிடம் அப்படி நடந்து கொண்டேன். எனது ஆணவம் என்னை விட்டுபோக என் ஆவணத்தை பார்த்து தூரப்போ எனும் மந்திரத்தை சொல்லி இந்தபாவிக்கு மோட்சம் அளியுங்கள் .." என வேண்டினார்.
"எனது குருநாதா...எனக்கு நீங்கள் தீங்கு எதையும் விளைவிக்க வில்லை. உங்களை ஆணவம் கொண்டவராக பார்க்கும் அளவுக்கு நான் வளர்ந்துவிடவும் இல்லை. நீங்கள் அளித்த மந்திரம் உங்களையும் என்னையும் இணைத்துநன்மையையே ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் காலத்தில் உங்களின் எளியசிஷ்யனாக இருக்க ஆசைப்படுகிறேன்...இதற்கு நீங்கள் அனுமதி அளிக்கவேண்டும்..." என தூரப்போ சுவாமிகள் வேண்டினார்.
பின்பு தூரப்போ சுவாமிகள் சப்தமாக கூறினார்..."எனக்குள் இருக்கும் மந்திர ஆற்றலை பார்த்து கடைசியாக சொல்கிறேன் ...
"தூரப்போ"....
அங்கே துரப்போ சுவாமிகள் மறைத்து குகன் நின்று இருந்தான்...
தனது குரு பக்தனந்தா வுடன் எளிய சிஷ்யனாக பயணமானான் குகன்.
-------------------------ஓம்--------------------------
குரு நிலையை உணர்தவர்கள் அனைத்தையும் துறக்க முடியும்...
குருவை ஆழமாக பூஜிப்பவர்கள் தான் குருவை உணர முடியும்... குரு அருள் பெறமுடியும்...
தெளிவு குருவின் திருமேனி காண்டல் என திருமூலர் கூறிய வாக்கு மிகவும் சக்திவாய்ந்தது தானே?
கன்னகோல் கண்ணுசாமியை அனைவருக்கும் தெரியும். அவனின் முக்கிய தொழிலே திருடுவதுதான்.
கண்ணுசாமியின் தொல்லை தாங்க முடியாமல் ஊர் பஞ்சாயத்து அவனுக்கு தண்டனை கொடுத்து தலை மொட்டை அடிக்கப்பட்டு ஊரைவிட்டே ஒதுக்கி வைத்தார்கள்.
இதனால் சரிவர தொழிலை செய்ய முடியாத காரணத்தால் வறுமையில் வாடினான் கண்ணுசாமி. இந்த ஊரில் இருந்தால் வறுமையில் வாடி இறந்து போக நேரிடும் என வேறு ஊருக்கு சென்று தொழில் செய்ய எண்ணினான்.
கால்நடையாக பல நாட்கள் நடந்து ஒரு ஊரை அடைந்தான். பசி அவனை பாடாய் படுத்தியது. சூரியன் சாயும் மாலை நேரத்தில் உணவுக்காக தேடுதலை தொடங்கினான்.
பசி தாங்க முடியாமல் அங்கும் இங்கும் அலைந்தான். அங்கு தோட்டம் ஒன்று இருப்பதை கண்டான். பூசணிக்காய்கள் விளைவிக்கப்பட்டு பெரிய தோட்டமாக காட்சியளித்தது. ஒரு பூசணி பழத்தை உண்டால் தனது பசி அடங்கும் என நினைத்த கண்ணுசாமி மெல்ல பூனை போல தோட்டத்தில் இறங்கினான். நல்ல பழுத்த பூசணிப்பழத்தை பறிக்க முற்படும் பொழுது திடீரென காவல்காரன் யாரோ தோட்டத்தில் நடமாடுகிறார் என பார்த்துவிட்டான்.
காவல்காரனின் கூச்சல் கேட்டு ஆட்கள் ஓடிவர கண்ணுசாமிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.கரும்பு அல்லது வாழை தோட்டம் என்றால் மறைந்துகொள்ளலாம். பூசணி தோட்டத்தில் மறைந்து கொள்ள இடமா இருக்கும்?
உடனடியாக அவனின் தொழில் புத்தி வேலை செய்ய துவங்கியது. தனது உடைகளை அவிழ்த்து தோட்டத்துக்கு வெளியே வீசி எறிந்தான். உடல் முழுவதும் பூசணிக்காய்கள் மேல் இருக்கும் சாம்பலை எடுத்து பூசிக்கொண்டான்.
காவலாளியுடன் ஓடிவந்த மக்கள் மழிக்கப்பட்ட தலையும், மெலிந்த தேகமும் , கோவணமும் மற்றும் திருநீர் பூசப்பட்ட உடலுடன் ஒரு சிவயோகி நின்று இருப்பதாய் கண்டனர்.
அனைவரும் அவரின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி வேண்டினர்.
இனி கன்னகோல் கண்ணுசாமியை நாம் சிவயோகி என்றே அழைப்போம்.
சிவயோகியை அழைத்துவந்து அந்த தோட்டத்தின் ஒரு மூலையில் குடிசை அமைத்து தங்க வைத்தனர். உணவு வழங்கினார். சிவயோகிக்கு மகிழ்ச்சி தங்கவில்லை. பசியால் பூசணியை சாப்பிட போன சிவயோகிக்கு இப்போலோது விதவிதமான உணவுகள் கிடைக்க துவங்கியது. தான் வாய் திறந்தால் உண்மை தெரிந்துவிடும் என்பதால் மௌனமாக இருந்தார் சிவயோகி. யாரிடமும் பேசுவதில்லை.
சிவயோகி அந்த ஊருக்கு வந்திருப்பது காட்டுத்தீயாக பரவியது. கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து தரிசிக்க துவங்கினார்.
ஆன்மீக தேடல் உள்ள ஒரு வாலிபன் சிவயோகியை காண வந்தான். அவர் முன் அமார்ந்து பல ஆன்மீக கேள்விகளை கேட்டான். ஒன்றுக்கும் சிவயோகி பதில் சொல்லவில்லை. மௌனமாக அவனை பார்த்துகொண்டிருந்தார்.
இளைஞனும் விடுவதாக இல்லை. சிவயோகியின் கால்களை பிடித்து "ஐயனே ஞானம் அடைய என்ன செய்ய வேண்டும் என கூறுங்கள். அதுவரை உங்கள் காலடியை விடமாட்டேன்" என்றான்.
சிவயோகிக்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை. வாலிபன் போக விட்டால் இன்று கிடைக்கும் உணவும் காணிக்கைகளும் பாதிக்கப்படுமே என எண்ணினார்.
பலர் கூடி இருக்க இவன் நம்மை சிக்கலில் மாட்டிவிடுவான் என நினைத்து...அவனை மெல்ல கைகளால் தூக்கினார்.
வாய்திறந்தால் தனது ஞானம் தெரிந்துவிடும் என சைகையில் தனது கதையை சொல்ல துவங்கினார். அங்கும் இங்கும் அலைவது போலவும் , பூசணிக்காயை குறிக்க பந்து போல கண்பித்து , உடலில் அதை பூசினதாக சைகை செய்தார்.
அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த வாலிபனுக்கு கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. "குருவே...அருமையான உபதேசம். அலைந்து திரியாதே , ஜகம் அனைத்தும் உனக்கு உள்ளேயே இருக்கிறது என அருமையான உபதேசத்தை எனக்கு அளித்தீர்கள், எனது ஞானத்தின் சாவி உங்களிடம் கிடைத்தது" என வாலிபன் கூறினான்.
சிவயோகியை முன்று முறை சுற்றி விழுந்து வணங்கி விடைபெற்றான். தனக்குள்ளே இருக்கும் விஷயத்தை தேடி தேடி ஒரு நாள் ஞானம் அடைந்தான் வாலிபன்.
----------------------ஓம்-----------------------------------------
இந்த கதையில் திருடன் குருவாக இருப்பதாய் கண்டு இது சாத்தியமா என எண்ணலாம். வால்மிகி கூட ஒரு கொள்ளைக்கரனாக இருந்தார், பிறகு ராம நாமத்தால் உலகின் அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார் அல்லவா?
திருமூலர் தனது மந்திரத்தில் "கள்ள புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே" என்கிறார்.
நமது ஆன்மாவிற்கு தெரியாமல் கள்ளத்தனமாக செயல்படும் புலன்களை நல்வழிப்படுத்தினால் ஆன்மீக உயர்வு பெறலாம்.
குரு எப்படிப்பட்டவர் , குரு ஞானம் அடைந்தவரா என்பது முக்கியமில்லை,
நாம் அவர் மூலம் ஞானம் பெறுவோமா என்பது தான் முக்கியம்.
நினைத்தாலே முக்தியளிக்கும் திருவண்ணாமலை....அண்ணாமலையானின் மடியில் இருப்பதை போல அமைத்திருந்தது அந்த குகை.பெரிய கோவிலின் கோபுரங்கள் பார்க்கும் வண்ணம் இருந்த குகையின் வெளியே அமர்ந்திருந்தார் குகை நமச்சிவாயர்.அடிக்கடி நமச்சிவாய நாமத்தை சொல்வதாலும் , குகையில் வசிப்பதாலும் அம்முனிவரை அனைவரும் குகை நமச்சிவாயர் என அழைத்தனர்.அவருக்கு அருகில் அவரது சிஷ்யன் தனது குருவிக்கு உதவ அருகில் நின்று இருந்தான்."குளுக்"ஆழ்ந்த அமைதி சூழ்ந்திருந்த வேலையில் சிஷ்யன் சிரிக்கும் ஒலி கேட்டு நிமிர்ந்தார் குகை நமச்சிவாயர்."என்னப்பா அவ்வளவு சிரிப்பு? அந்த வேடிக்கையை எனக்கும் சொல்ல கூடாதா?" என்றார் குகை நமச்சிவாயர்."குருவே எனது இடையூருக்கு மன்னிக்கவும். திருவாரூர் தேர் வரும் பொழுது அதன் முன் ஆடிய பெண் ஒருவள் கால் தடுக்கி விழுந்தால் , அனைவரும் சிரித்தனர் அதனால் நானும் சிரித்தேன் " என்றார்.குகை நமச்சிவயருக்கோ ஒரே ஆச்சரியம். திருவண்ணாமலை வசித்துக்கொண்டு எப்படி நம் சிஷ்யன் திருவாரூரை ரசிக்கிறான் என நினைத்து கொண்டார்.சில நாட்கள் சென்றன...குகை நமச்சிவாயர் அமர்ந்து சிஷ்யனுடன் ஞான கருத்துக்களை விளக்கி கொண்டிருந்தார்.திடீரென பதற்றமாக சிஷ்யான் தோளில் கிடக்கும் துண்டை எடுத்து உதறி மீண்டும் அணிந்து கொண்டார்.சிஷ்யனின் பதட்டத்தை கண்ட குரு அதன் காரணத்தை கேட்டார்."சிதம்பரத்தில் நடராஜர் சந்நிதியில் தீபாராதனை காட்டும் பொழுது அங்கு இருந்த திரை சீலை தீ பற்றி கொண்டது . அதை அணைத்தேன், அதனால் உங்கள் பேச்சை நடுவில் தடுத்ததற்கு என்னை மன்னியுங்கள்" என்றார்.சிஷ்யனின் செயல் வினோதமாக இருப்பதால் அவனது குரு பக்தி உண்மையா எனவும் சோதிக்க எண்ணினார்.சிஷ்யன் அருகில் இருக்கும் பொழுது திடீரென வாந்தி எடுத்தார். சிஷ்யனை அழைத்து "இதை யார் காலிலும் படாத இடத்தில் போட்டுவிட்டு வா" என பணிந்தார்.சிறிதி நேரத்திக்கு பிறகும் சிஷ்யன் எங்கும் செல்லாமல் அங்கு இருப்பதை கண்டு நான் இட்ட பணியை செய்தாயா? என கேட்டார்."ஐயனே அதை அப்பொழுதே செய்துவிட்டேன்" என்றான் சிஷ்யன்."எங்கு அதை போட்டாய்?" என்றார் குகை நமச்சிவாயர் ."குருவே யார் காலும் படாத இடம் எனது வயிறு மட்டுமே. எனவே நீங்கள் கொடுத்ததை விழுங்கி விட்டேன்" என்றான் குரு பக்தியில் சிறந்த சிஷ்யன்.தன்னை விட பக்தியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கும் சிஷ்யனை பெருமிதத்துடன் பார்த்தார் குரு.சிஷ்யனனே உனது பக்தியால் என்னையே மிஞ்சிவிட்டாய் , இனிமேல் உன்னை அனைவரும் குரு நமச்சிவாயர் என அழைப்பார்கள் என ஆசிர்வதித்தார் குகை நமச்சிவாயர் ----------------- ஓம்-------------------கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுகஉள்ள பொருளுடன் ஆவியுடன்ஈக எள்ளத்தனையும் இடைவேடா தேநின்றுதெள்ளி யறியச் சிவபதந் தானே திருமந்திரம் - 1692குருவிடம் காட்டும் பணிவு நம்மை உயர் நிலைக்கு கொண்டுசெல்லும்.குருவின் அருள் இருக்குமானால் நமது ஆன்ம சாதனையில் பல முன்னேற்றம் இருக்கும். அதை தவிர வேறு என்ன வேண்டும் இப்பிறவியில்?
குருவும் சிஷ்யனும் பயணத்தில் இருந்தார்கள். சன்யாச தர்மத்தை கடைப்பிடிப்பதால் பிச்சை எடுக்க ஒரு பாத்திரம் மற்றும் ஒரு மாற்று உடையுடன் பயணத்தில் இருந்தார்கள்.வழியில் ஒரு ஓடை குறுகிட்டது. அதை கடக்க இருந்த பாலம் பழுது பட்டிருந்தது. இருவரும் அதை பற்றி யோசித்து கொண்டிருக்கும் பொழுது அழகிய மங்கை ஒருவள் அங்கு வந்தாள். பாலம் பழுது பட்டிருப்பதை கண்டு வருத்தம் கொண்டாள். துறவி இருவரையும் பார்த்து, " தெய்வீகமானவர்களே அவசரமாக அக்கரைக்கு செல்ல வேண்டும். எனக்கு உதவி செய்ய முடியுமா?" என கேட்டாள்.உடனே குரு சிறிதும் தாமதிக்காமல் அவளை தோள்களில் சுமந்து கொண்டு ஓடையில் இறங்கி மறுகரையில் சேர்த்தார். இச்செயல் சிஷ்யனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருவரும் பயணத்தை தொடர்ந்தனர். சிறிது நேரத்துக்கு பின் குரு சிஷ்யனை கண்டார். பெருத்த யோசனையுடன் வரும் சிஷ்யனிடம் கேட்டார் "மகனே ஏன் இந்த யோசனை? வாழ்க்கையிலும் சரி வழிப்பயணத்திலும் சரி மனதில் கணம் இருந்தால் பயணம் ருசிக்காது. சொல் என்ன உனக்கு பிரச்சனை?""எனது குருவே நாம் துறவி அல்லவா? அந்த பெண்ணை நீங்கள் தோளில் சுமந்து எப்படி சரியான செயலாகும் ?" என்றான் சிஷ்யன்.சிஷ்யனை ஆழமாக பார்த்த குரு தொடர்ந்தார். ..."உனது கேள்வியால் மகிழ்தேன். எனது சிஷ்யா , அப்பெண்ணை நான் சில நிமிடம் தான் தோளில் சுமந்தேன் ஆனால் நீயோ அவளை நெடுந்தொலைவு மனதில் சுமந்து கொண்டு வருகிறாயே இது மட்டும் முறையா? சன்யாசம் என்பது பற்றற்று மனதில் தூய்மையை சிறிதும் இழக்காமல் இருப்பதே ஆகும்.." மனதில் இருந்த மங்கையை இறக்கி வைத்து பூரணத்துவம் அடைந்தான் சிஷ்யன்.----------------------ஓம்------------------இந்த கதையை படித்ததும் இது எல்லாம் நடைமுறையில் நடக்குமா? அல்லது சுவாரசியத்துக்காக புனயப்பட்டதா என சந்தேகம் உதிக்கலாம்.பழங்கலம் முதல் இந்த கதை வழக்கத்தில் இருந்தாலும், இது குரு-சிஷ்யனுக்கு இடையே நடந்த உண்மை சம்பவமாகும். உண்மை சம்பவத்தை விவரிக்கிறேன் ..... ரிஷிகேஷ் எனும் ஆன்மீக பூமி.மாலை நேரத்தில் கங்கை நதி ஓரமாக தெய்வீகமாக கட்சி அளித்தது ஆனந்த குடீரம்...சத்சங்கம் முடிந்ததும் சன்யாசிகள் சூழ நடை பயிற்சியில் ஈடுபட்டார் குருநாதர். அந்த குழுவில் ஒரு தாயும் மகளும் தவிர அனைவரும் ஆண் சன்யாசிகள். அனைவரும் ஆசிரமத்தை விட்டு சிறிது வனப்பகுதில் நடந்து கொண்டிருக்கும் பொழுது அந்த விபரீதம் நடந்தது. தாயுடன் வந்த அந்த இளவயது மகள் திடீரென "ஐயோ" என கதறி கீழே விழுந்தாள். அவளை தேள் ஒன்று தீண்டிருந்தது..தனது மகளுக்கு நேர்ந்த துன்பத்தை கண்ட தாயும் கதறி அழ துவங்கினார். சன்யசிகளோ என செய்வது என திகைத்து நின்றனர். குருநாதர் அங்கு நடப்பதையும் தனது சிஷ்யர்களின் செயல்பாட்டையும் கவனித்து கொண்டிருந்தார். சில சன்யாசிகள் ஆசிரமம் சென்று கட்டை மற்றும் கயிறுகளை கொண்டுவந்து அதில் அப்பெண்ணை கொண்டு செல்லலாம் என திட்டமிட்டனர். மேலும் சிலர் வேறு வழிமுறைகளை ஆலோசித்தனர். இதனிடையே ஒரு சன்யாசி விரைந்து வந்து அந்த கன்னி பெண்ணை தூக்கி தோளில் போட்டுகொண்டு காட்டுப்பாதையில் விரைவாக பயணித்து ஆசிரம மருத்துவமனையில் சேர்த்தார். சில காலத்துக்கு ஆசிரமம் முழுவதும் இதே பேச்சாக இருந்தது. கன்னி பெண்ணை எப்படி சன்யாசி தொட்டு தூக்கலாம் என பேசினார்கள். ஆனால் இதை குருவும், அப் பெண்ணை தூக்கிய சிஷ்யரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. சில மாதங்கள் சென்றன. ..ஆசிரமத்தில் வளர்ந்து வந்த ஒரு நாய் நோய்வாய்ப்பட்டது. உடல் முழுவதும் சொறியும், சீளுமாக காட்சியளித்தது. நோய்வாய்ப்பட்ட நாயை கால் நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல யாரும் முன்வரவில்லை. உடனே அந்த சன்யாசி ஒரு துணியால் அந்த நாயை எடுத்து வாகனத்தில் வைத்து மருத்துவ மனைக்கு செல்ல உதவினார்.சத்சங்கத்தில் குரு கூறினார். .."எனது சிஷ்யனுக்கு கன்னி பெண்ணும் , நோயுற்ற நாயும் ஒன்றுதான். சன்யாசம் ஆன்மாவில் இருக்கவேண்டும், மனதில் அல்ல."இந்த உண்மை சம்பவத்தில் வரும் குரு : சுவாமி சிவானந்தர் - www.dlshq.orgசிஷ்யன் : சுவாமி சச்சிதானந்தா - www.swamisatchidananda.orgஆதாரம் : வாழ்வும் வாக்கும் -சுவாமி சச்சிதானந்தா
மாலை வேளை....வேதாந்த ஆச்ரமம் ரம்யமாக இருந்தது...நந்தவனத்துடன் கூடிய ஆச்ரமம் முன்பு மாணவர்கள் அமர்ந்து விவாதித்து கொண்டிருந்தனர்.தர்க்கம் , மீமாம்சை என பல வேத கருத்துக்களை மாணவர்கள் அந்த ஆசிரமத்தில் பயின்று வந்தார்கள்.அப்பொழுது தென்றல் வீசியது...நந்தவனத்தில் இருந்த மலர் கொடி அசைந்தது...இதை கண்ட மாணவர்களுக்குள் தர்க்கம் ஆரம்பித்தது. "காற்று வந்ததும் கொடி அசைந்ததா?" என ஒரு பகுதியும் ,"கொடி அசைந்ததும் காற்று வந்ததா? " மற்றொரு பகுதியும் என மாணவர்கள் இரு பகுதியாக பிரிந்தனர். இந்த தர்க்கம் முற்றிபோகவே , சப்தம் கேட்டு குரு நாதர் வெளியில் வந்தார்.இரு குழுவின் தர்கத்தையும் கேட்டார். பின்பு அனைவரையும் பார்த்து கூறினார் ..."பிரிய ஆன்மாக்களே...! கொடியும் அசையவில்லை, கற்றும் வீசவில்லை... உங்கள் மனம் அசைந்தது , அதனால் எண்ணம் உங்கள் மனதில் வீசியது. "வேதாந்த மாணவர்கள் உண்மையான வேத சாரத்தை உணர்தார்கள்.----------------------------- ஓம் ------------------------------------------------ஆதி சங்கரரின் வேதாந்த கருத்தை எளிமையாக உணரும் கதை இது...நமது கண்களில் தெரியும் உலகம் என்பது உண்மையல்ல. நமது மனம் அசைவதால் அனைத்தும் அசைவதாக தெரிகிறது...அதனால் தான் வேதம் நம்மை "அசதோமா ஸத்கரமய" என இருள் நிலையில் இருந்து உண்மை நிலைக்கு வர ப்ராத்தனை செய்ய சொல்கிறது.அசைவற்ற மனதை கொண்டு என்றும் ஆசையற்றவனை உணருவோம்.
சப்த ரிஷிகளில் ஒருவரான நாரதர் எப்பொழுதும் கையில் தம்பூராவுடன், "
ஓம் நமோ நாராயணாயா:"
எனும் மந்திரத்தை சொன்னபடி மூன்று உலகையும் வலம் வருபவர். பக்திக்கு உதாரணமான நாரத முனிவர் பற்றி நமக்கு தெரியும்...ஆனால் அவர் ஏன் அந்த மந்திரத்தை எப்பொழுதும் ஜபிக்கிறார் என தெரியுமா?ஒரு நாள் வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணன் அனந்த சயனத்தில் இருந்தார். அவரின் பாத கமலத்திற்கு அருகில் மகாலக்ஷ்மி அமர்த்திருந்தார்.அங்கு வந்த நாரதர் "பரப்பிரம்ம சொரூபா, அனைவரும் உனது நாமத்தை சொல்கிறார்களே ? அப்படி என்ன இருக்கிறது உனது நாமத்தில்?" என கேட்டார்.தேன் சொட்டும் சிரிப்புடன் மஹாவிஷ்ணு நாரதரை பார்த்தார். "நாரதா நாம ஜபத்தின் மகிமையை உனக்கு விளக்குவதை விட, நீயே பரீட்சித்து பார்த்து தெரிந்து கொள். பூலோகம் சென்று தென்திசை தேசத்தில் ஒரு வனம் இருக்கும். அங்கு வாழும் ஒரு புழுவிடம் மஹா மந்திரத்தை சொல்." என்றார்.பரந்தாமன் சொன்ன வனத்தை நோக்கி பயணமானார் நாரதர். அங்கு ஒரு புழு இலையின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. அதன் அருகில் சென்று கூறினார்
.... " ஓம் நமோ நாராயணாயா:"
உடனே அந்த புழு செத்து விழுந்தது.நாரதர் குழப்பம் அடைந்து வைகுண்டம் சென்றார்."பரமாத்மனே நான் நாமத்தை கூறியதும் அந்த புழு செத்து விழுந்தது. இது தான் உங்கள் நாம மகிமையா? " என கேட்டார் நாரதர்.மந்தகாச புன்னகையுடன் மாதவன் கூறினார்.."நாரதா மீண்டும் பூலோகம் செல் அங்கு ஒரு பசு மாடு ஒரு கன்றை ஈனும் அதனிடம் சென்று மஹா மந்திரத்தை சொல்" என்கிறார்.நாரதர் மீண்டும் பூலோகம் வந்தார். அங்கு இவருக்காகவே காத்திருந்ததை போல ஓர் பசு மாடு கன்றை ஈன்றது. கன்றின் அருகில் சென்று கூறினார் .... " ஓம் நமோ நாராயணாயா:"பிறந்து சில நிமிடங்களே வாழ்ந்த அந்து கன்று கீழே விழுந்து இறந்தது.நாரதர் திடுக்கிட்டார். என்ன ஒரு பாவம் செய்து விட்டோம்?. பசுமாட்டை கொல்வதே மஹா பாவம். இதில் பிறந்து சில கணமேயான கன்றாக இருக்கும் பொழுதே அல்லவா கொன்றுவிட்டோம்.வைகுண்டத்துக்கு ஓடோடி வந்தார் நாரதர். "பிரபோ ...! நான் மஹா பாவம் செய்து விட்டேன். உங்கள் நாமத்தை சொன்னதும் கன்று இறந்து விட்டது. இது என்ன விளையாட்டு? ""நாரதா கவலை படாதே , மீண்டும் ஒரு முறை பூலோகம் சென்று மஹா மந்திரத்தை சொல். அங்கு ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருப்பான். இந்த முறை அவனிடம் சொல்" என்றார் அனைத்தும் அறிந்த அச்சுதன். நாரதருக்கோ பயம். ஏற்கனவே இரு முறை பட்ட அநுபவம் அவரை நடுங்க வைத்தது. ஒரு சிறுவன் தன்னால் மடிந்து விடக்கூடாதே என கவலை பட்டார். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பூலோகம் வந்தார்.அங்கு சிறுவன் பொம்மைகளுடன் விளையாடி கொண்டிருந்தான். அவனருகில் சென்ற நாரதர் கூறினார்.... " ஓம் நமோ நாராயணாயா:"நீங்கள் எதிர்பார்த்தது சரிதான்.. அந்த சிறுவன் நாமத்தை கேட்ட மாத்திரத்தில் இறந்தான்.நாரதருக்கோ பித்து பிடித்த நிலை அடைந்தார். வைகுண்ட வாசன் ஏன் நம் வாழ்கையில் விளையாடுகிறார் என சந்தேகம் கொண்டார். மீண்டும் வைகுண்டம் அடைந்தார். அங்கு ஸ்ரீ மந் நாராயணனும் மஹா லக்ஷிமியும் அமர்ந்திருக்க அவர்களின் பாத கமலத்திற்கு அருகில் ஒரு முனிவரும் அமர்ந்து இருந்தார். மனம் தடுமாறிய நிலையில் வந்த நாரதரை கண்ட கேசவன் கேட்டார் ," நாரத என்ன ஆயிற்று உனக்கு?" என வினாவினார்.தனது ஐயத்தை கேட்பதற்கு முன் வைகுண்டத்தில் புதிதாக வந்த முனிவரை குழப்பத்துடன் பார்த்தார் நாரதர். பின்பு வைகுண்டவாசனை நோக்கி "ஐயனே இது என்ன சோதனை. நான் மஹா மந்திரம் ஜபிக்கும் இடத்தில் எல்லாம் உயிர்கள் அனைத்தும் இறந்து விடுகின்றன. பால் மனம் மாறாத பாலகன் அவனும் எனது நாமத்தை கேட்டு இறந்து விட்டான். உங்கள் நாமம் அவளவு கொடுமையானதா ? அல்லது நான் உச்சரித்தது தவறா?" என கேட்டார் பக்திக்கு சூத்திரம் சொன்ன நாரதர்.வாசுதேவர் நாரதரை பார்த்தார் ," நாரதா நீ சொல்வதிலும் உண்மை இருக்கும் என நினைக்கிறேன். எங்கே என் முன்னாள் ஒரு முறை மஹா மந்திரத்தை கூறு" என்றார்.அனந்த சயனன் இருக்கும் தைரியத்தில் தனது மனதை திடமாக்கி கண்களை மூடி மீண்டும் ஒருமுறை சொன்னார். " ஓம் நமோ நாராயணாயா:"நாரதர் கண்களை திறந்து பார்த்ததும் , ஸ்ரீ மன் நாராயணனின் பாதத்தில் இருந்த முனிவர் உடலை விடுத்து பரமாத்மாவிடம் சரணடைந்தார். நாரதர் ஒருவித கலக்க நிலை அடைந்தார். வரம் அளிக்கும் கரிவரத மூர்த்தியானவர் நாரதரை பார்த்து கூறினார் "....பக்தியின் வடிவமான நாரதா...எனது நாமத்தை உச்சரித்தால் அனைத்து உயிர்களும் முக்தி அடையும். உனது நாமத்தை கேட்டதும் புழு பசுவாகவும், பசு பாலகனகவும், மறு பிறப்பை அடைந்தது. பாலகன் மாமுனியாக அவதரித்ததும் மஹா மந்தரத்தால் தான் . கடைசியாக நீ மஹா மந்திரத்தை உச்சரித்தும் அந்த மாமுனியும் முக்தி அடைந்தான்.... மஹா மந்திரம் அனைவரையும் முக்தியடைய வைக்கும் சாதனம் என்பதை உணர்த்தவே உன்னை பயன்படுத்தினேன். ... மஹா மந்த்திரத்தை கேட்பவர்களுக்கே முக்தி என்றால் , அதை ஜபிப்பவர்கள அடையும் பயனை எண்ணிப்பார்"நரதனுக்கு அனைத்தும் புரிந்தது. அன்று முதல் கையில் தம்பூராவுடன் தொடர்ந்து உச்சரிக்க தொடங்கிறார்... " ஓம் நமோ நாராயணாயா:" " ஓம் நமோ நாராயணாயா:"" ஓம் நமோ நாராயணாயா:"--------------------ஓம்--------------------------இந்த கதையை படிக்கும் சுவாரசியத்தில் உங்களை அறியாமல் எத்தனை முறை மஹா மந்திரம் ஜபித்தீர்கள் பார்த்தீர்களா? உங்களையும் சுற்றி இருக்கும் அனைத்து வஸ்துவையும் வளமாக்கும் ஒரே மந்திரம் மஹா மந்திரமே.மேலும் ஸ்ரீ மந் நாராயணனின் ஸஹஸ்ர நாமத்தில் உள்ள சில பெயர்களை கதையில் சேர்த்தால் ஸஹஸ்ர நாமம் சொன்ன பலனும் கிடைத்தது.மஹா வாக்கியம் என்றும் பொய்ப்பதில்லை . மந்திர ஜபம் நம்மை நல்கதிக்கு நாரதரை போல கொண்டு செல்லும்." ஓம் நமோ நாராயணாயா:"