Monday, February 9, 2009

ஆன்மீக சாதனை


குரு மரண படுக்கையில் இருந்தார்..

அருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான்.

குரு மெல்ல அவனை அழைத்து, “ சிஷ்யா.. ஏன் கவலைப்படுகிறாய்? உனக்காக நான் எப்பொழும் இருப்பேன். கலக்கம் அடையாதே...”

கலங்கிய கண்களுடன் சிஷ்யன் கூறினான்.. “குருதேவா... நீங்கள் கூறியபடி ஜாபம் தியானம் எல்லாம் செய்து வருகிறேன். ஆனால் ஆன்மீக உயர்நிலை அடையும் காலம் எப்பொழுது என தெரியவில்லை. எதுவரை எனது ஆன்மீக பயிற்சியை தொடர்வது. உங்கள் காலத்திற்கு பிறகு யாரிடம் நான் கேட்பது?”


அணையும் ஜோதி பிரகாசகமாக சுடர்விடும் என்பதை போல ஜோதிர்மயமான முகத்துடன் சிஷ்யனை பார்த்தார் குரு.. “கவலை கொள்ளாதே. இந்த கட்டிலுக்கு அடியில் ஓர் பெட்டி இருக்கிறது. அதன் உள்ளே உனக்கு பிற்காலத்தில் உபதேசிக்க வேண்டியதை வைத்திருக்கிறேன்...அது அனைத்து விஷயங்களையும் போதிக்கும். எனது உபதேசம் தேவைப்படும் பொழுது மட்டும் பெட்டியை திறந்து பார். எனது ஆசிகள்”...என கூறியபடி அவரின் ப்ராணன் உள்ளே அடங்கியது.


நாட்கள் சென்றன...

தனது ஆன்மீக சாதனையில் தனக்கு பலன் கிடைப்பதாக சிஷ்யனுக்கு தெரியவில்லை.. தியானம் , ஜபம் ஆகியவற்றை விட்டுவிடலாமா என எண்ணினான்..

குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்.


சிஷயன் ஞானம் அடைந்தான்..






நாட்கள் சென்றன...

சிஷ்யன் கூறிய கருத்துகளை மக்கள் ஏற்காமல் கலகம் செய்தனர்.

மீண்டும் குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்..

அதற்கு பின் வரும் காலத்தில் மக்கள் கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர்...





நாட்கள் சென்றன...

தனது இறுதி காலத்தை அடைந்தான்.. தனது சிஷ்யனை கூப்பிட்டு கூறினான்..

“எனது பிரிய சிஷ்யா.. எனது குரு எனக்கு அளித்த உபதேசத்தை உனக்கு அளிக்கிறேன். எனது உபதேசம் தேவையான பொழுது மட்டும் இந்த பெட்டியை திற. எனது உபதேசம் கிட்டும்.”

சிஷ்யனுக்கு சிஷ்யனான பரம சிஷ்யன்.. தனது ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்பட்டது. குருவின் உபதேசம் அறிய பெட்டியை திறந்தான்..

அதில் எழுதி இருந்த வாசகம்...

“இன்னொரு முறை முயற்சி செய்”


-----------------------------------------------------------
சிஷ்யனுக்கு மட்டுமல்ல நமக்கும் ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்படும் பொழுதும் இந்த உபதேசம் உதவும்..

குரு என்பவர் உபதேசிக்க மட்டுமே முடியும். ஆன்மீக சாதனையை தனி ஒரு மனிதன் செய்து உயர்வடைய வேண்டும்.

எளிமையாக சொல்ல வேண்டுமானால் குரு சமைத்து கொடுக்கலாம், ஏன் ஊட்டிகூட விடலாம். ஆனால் நாம் தான் ஜீரணிக்க வேண்டும்.


20 comments:

கோவி.கண்ணன் said...

முயற்சி திருவினையாக்கும் என்பதை கதை மூலம் சொல்லி இருக்கிறீர்கள் நன்றாக இருக்கிறது.

அண்மையில் தான் எங்கோ படித்தேன்.

"முயற்சியை கைவிட்ட பிறகே நீ தோல்வி அடைந்தவனாக உணருவாய்"

ஸ்ரீதர்கண்ணன் said...

நல்ல கருத்து ..

நாமக்கல் சிபி said...

நன்று!

Unknown said...

எங்கோ படித்தாலும் நன்றாக இருக்கிறது.

1.You can bring the horse to the water, but cannot make the horse drink.

2.அழுதாலும் பிள்ளை அவளேப் பெற
வேண்டும்

3.தூண்டில்தான் கொடுக்கப்படும்.நீதான்
பிடிக்கவேண்டும்

Test said...

Nice Stroy with Truth

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

TKB காந்தி said...

அழகான கருத்து

எம்.எம்.அப்துல்லா said...

:)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நல்ல கருத்தை விளக்கும் கதை.

ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையில் வரும் படக்கதையை நினைவுபடுத்தியது.

பாராட்டுடன் கூடிய நன்றிகள்.

sarul said...

வணக்கம் ஸ்வாமி
ஒரு சந்தேகம்
தான் சமாதி அனுபவம் பெற்றுவிட்டேன் என்று சொல்பவர்களை எவ்வாறு எடுத்துக்கொள்வது. அவர்களுடைய சமாதி அனுபவம் அவர்களுடைய கருத்துக்களில் பிரதிபலிக்குமா

குசும்பன் said...

நல்ல கருத்து!

ஸ்வாமி ஓம்கார் said...

கோவியார் அருமையான மேற்கோள் காட்டியுள்ளீர்கள். நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஸ்ரீதர்கண்ணன்,
திரு.நாமக்கல் சிபி,
திரு ரவிஷங்கர்,
திரு லோகன்,
திரு காந்தி,
அப்துல்லா அண்ணா,
திரு அறிவன்,
திரு குசும்பன்,

அனைவருக்கும் எனது நன்றிகள்.

108 கதைகள் முடியும் வரை ஆதரவு தாருங்கள்...

ATOMYOGI said...

nice story with great lesson...

RAHAWAJ said...

நல்ல கருத்தை அருமையான கதையின் மூலம் சொல்லியுள்ளீர்கள்-

கோவி.கண்ணன் said...

//அப்துல்லா அண்ணா,//

ஸ்வாமியே அப்துல்லாவை அண்ணா என்று அழைப்பதால், அப்துல்லா இன்று முதல்

அண்ணா ஸ்வாமி அல்லது அண்ணாசாமி என்று அழைக்கப்படுகிறார்.

:)))))))

நாமக்கல் சிபி said...

//அண்ணா ஸ்வாமி அல்லது அண்ணாசாமி என்று அழைக்கப்படுகிறார்.//

அண்ணாசாமி அப்துல்லா வாழ்க!

நாமக்கல் சிபி said...

//108 கதைகள் முடியும் வரை ஆதரவு தாருங்கள்...//

கட்டாயம் ஆதரவு உண்டு!

அளவிலா ஆவலுடன்,

நாமக்கல் சிபி (எ) மாநக்கல் சிபி!

Sanjai Gandhi said...

கதை ஜூப்பரு சாமியோவ்.. :)

suvanappiriyan said...

நல்ல கருத்து!