Sunday, September 7, 2008

சிவன் எங்கே இருக்கிறார்?

ஆலமரத்தின் மேல் ஒரு குயில் மெல்ல கூவியது...

மரத்தின் அடிப்பகுதியில் குருவின் முன் அமர்ந்திருந்தான் விஸ்வநாத பிரம்மச்சாரி.

அவனது கண்கள் கலங்கி இருந்தன... தனது கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேச துவங்கினான்...”குருவே உங்களிடமிருந்து வேத சாஸ்திரத்தையும் பிரம்ம சூத்திரத்தையும் முழுமையாக கற்றுகொண்டேன். உண்மை பொருளை கூறும் அனைத்து கருத்துக்களையும் நீங்கள் எனக்கு விளக்கியுள்ளீர்கள். உங்களிடம் பணிவிடை செய்வதிலும் , உங்களுடன் இருப்பதிலும் எனக்கு நிகரில்லாத ஆனந்தம் கிடைக்கிறது. இப்படி இருக்க என்னை ஏன் வேறு இடத்தில் இருக்கும் ஒரு ஞானியை குருவாக ஏற்க கட்டளை இடுகிறீர்களே. இது நியாயமா?”..

அவனை மெல்ல தனது கரத்தால் தூக்கி குரு அவனை தீர்க்கமாக பார்த்தார்..”விஸ்வநாதா..! சாஸ்திர ஞானத்தை மட்டும் தான்
என்னால் உனக்கு வழங்க முடியும். உனக்கு பிரம்ம ஞானத்தை வழங்க குரு ஒருவர் காத்திருக்கிர்றார் . காசிக்கு அருகில் இருக்கும் வனத்தில் வசிக்கும் அவரை கண்டு ஞானம் அடைவாயாக...வளர்ச்சி அடையும் வரைதான் புழு கூட்டில் வசிக்க முடியும். அதன் பின் வண்ணத்து பூச்சியாக மாற கூட்டை கடந்து சென்றாக வேண்டும்...சென்று வா”...என்றார் குரு.


பிரிய மனமில்லாமல் தனது குருநாதரிடமிருந்து விடைபெற்றான் விஸ்வநாத பிரம்மச்சாரி..
காசியை அடைந்து அங்கு அவன் பெயரில் வீற்றிருக்கும் விஸ்வநாதரை தரிசித்துவிட்டு , நகரின் வெளியே இருக்கும் வனத்தை நோக்கி நடந்தான்.

வனத்திற்கு உள்ளே இரு நாட்களாக நடந்தும் யாரும் கண்களுக்குதட்டுபடவில்லை. தனது குரு அனுப்பியதன் நோக்கம் புரியாமல் குழப்பம் மேலோங்க பயணத்தை தொடர்ந்தான். பசியும் தாகமும் அவனை சோர்வடைய செய்தது. வழியில் தென்பட்ட தடாகத்தில் நீர் அருந்த குனிந்தான்.

அந்த தடாகத்தின் மேல்பரப்பில் அருகில் இருந்த கோவில் கோபுரம் நிழலாகதெரிந்தது... நடுக்காட்டில் கோவில் இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் அதை அடைந்தான்..

கோவில் வாசலை அடையும் முன் உள்ளே இருந்து ஓர் குரல் பேச துவங்கியது.....
”வா விஸ்வநாத உனக்காகத்தான் காத்திருக்கிறேன்...உனது குரு என்னை பார்க்கவே அனுப்பினார்..”

தனது ஞான குருவை காணும் ஆவலில் கோவிலின் உள்ளே சென்றான் விஸ்வநாதன்.

அங்கே கண்ட காட்சி அவனை மாபெரும் அதிர்ச்சி அடைய செய்தது...


பரதேசி போன்ற தோற்றம் கொண்ட ஒருவர்...கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மேல் தனது கால்களை வைத்து ஆட்டியவாறு தலையில் கைகளை வைத்து கொண்டும் படுத்திருந்தார்.

விஸ்வநாதனுகோ கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை. “எனது குருஉங்களை பற்றி உயர்வாக கூறி அனுப்பினார். நீங்கள் அவர் சொன்னதற்கு நேர்மாறாக அல்லவா இருக்க்கிறீர்கள். ஐயா சற்று சிவன் மேல் இருக்கும் காலை எடுத்து கீழே வைக்க கூடாதா?” என்றான்.

அந்த பரதேசி சற்றும் அவனது கருத்துக்களை காதில் போட்டுக்கொள்ளாமல்அவனை பார்த்து கூறினார்..”ஓ நீ அவ்வளவு பக்திமானா? உனக்குவேண்டுமென்றால் எனது கால்களை எடுத்து வேறு இடத்தில் வை. என்னால் கால்களை எடுக்க முடியாது..” என்றார்.

கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற விஸ்வநாதன் , அவரின் கால்களை பற்றி சிவலிங்கத்தின் மேலிருந்து எடுத்து வேறு இடத்ததிற்கு மாற்ற முயற்சிசெய்தான்.
கால்களை எங்கு வைத்தாலும் அங்கே ஓர் சிவலிங்கம் முளைத்தது...

பல இடங்களில் மாறி மாறி வைத்தான்...அனைத்து இடத்திலும் சிவலிங்கம்தோன்றின...

கடைசியல் முடிவுக்கு வந்தவனாக...

தனது தலையில் அவரின் கால்களை வைத்து கொண்டான்...

தானே சிவமானான்...

----------------------------------ஓம்-----------------------------
திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி
ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி
ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி
ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம்
- 1598

ஞானகுருவின் திருவடி நம்மை முழுமையான பரப்பிரம்ம நிலைக்கு கொண்டுசெல்லும். வேத நூல்களோ அல்லது தத்துவமோ எட்ட முடியாத எல்லையை குருவின்கருணை எளிதில் எட்டிவிடும்.


5 comments:

Anonymous said...

Thanks Swami Omkar.

There is a story / fable called Midas Touch, who wants Gold all along and looses his family to his greediness.

This is similar.

Why would God want a Muslim to find the Amarnath caves? Is there some meaning in it?

Regards
Ramesh

Anonymous said...

திரு ரமேஷ் அவர்களுக்கு,

நீங்கள் குறிப்பிட்ட கதை பேராசையின் அழிவை பற்றியது.
இங்கே குறிப்பிடபட்ட கதை கோகர்ணம் எனும் இடத்தில் நடந்த உண்மை சம்பவம்.

இன்றும் சிவலிங்கமாக காட்சிஅளிக்கிறான் அந்த சிஷ்யன்.

அமர்நாத் பற்றி உங்கள் கேள்வி எனக்கு நகைப்பை ஏற்படுத்தியது.


இறைநிலைக்கு மதம், இனம் என வேறுபாடு கிடையாது. நமது குறுகிய மனமே ஜாதி மதம் என பிரிக்கிறது.

தங்கள் வசிக்கும் நாட்டிலிருந்து பஞ்சாபை அடையாமல் இந்தியற்குள் வந்து கோவில்களை கொள்ளையடிப்பது முகமதியர்களின் வாடிக்கை.(காரணம் பஞ்சாப்பில் சீக்கியர்கள் அரணாக இருந்தார்கள்).அவ்வாறு வரும்பொழுது சில நல்ல உள்ளம் கொண்ட முகமதியரால் கண்டுபிடித்து கூறபட்டதே அமர்நாத். லிங்க ரூபம் என்பது இயற்கையான வடிவம். மேலும் எனது கருத்தில் அமர்நாத்தில் சிறப்பாக எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அது ஒரு சுயம்பு என வரையறை செய்ய முடியவில்லை.

சுயநலத்திற்காக சில மத்திய மந்திரிகள் ஏற்படுத்திய பனி லிங்கமே(பொம்மை) அங்கு இருக்கிறது.

கோவி.கண்ணன் said...

//அது ஒரு சுயம்பு என வரையறை செய்ய முடியவில்லை.

சுயநலத்திற்காக சில மத்திய மந்திரிகள் ஏற்படுத்திய பனி லிங்கமே(பொம்மை) அங்கு இருக்கிறது.

September 9, 2008 1:02 PM
//

ஸ்வாமி ஓம்கார் அவர்களே,

இது போன்ற உண்மைகளை வெளிப்படையாகச் சொல்ல உண்மையிலேயே நல்ல தெளிவு இருக்க வேண்டும். பாராட்டுக்கள்

தேவன் said...

அருமையான கருத்து என்னுள் ஆழப்பதிந்தது

நன்றி

தேவன் said...

அருமையான கருத்து என்னுள் ஆழப்பதிந்தது

நன்றி