Friday, July 18, 2008

நிர்வாணம்

வியாசர் தனது மகன் சுக பிரம்மத்துடன் வேறு ஒரு இடத்துக்கு பயணம் செய்து கொண்டிருந்தார்..
இவர்களை பற்றி சில தகவல்களை பார்ப்போம்...

வேதங்கள் அனைத்தையும் நான்காக தொகுத்தவரும், பதினெட்டு புராணங்களை அமைத்தவரும் வியாசர். மகாபாரதத்தை இவர் உருவாக்க எழுத்து பணியை (Script Writing ) செய்தது விநாயகர் என்பதன் மூலம் இவரின் ஆன்மீக நிலை விளங்கும்.

சுக பிரம்மா மஹரிஷி தனது தந்தை வியாசரை காட்டிலு உயர் நிலையில் இருப்பவர். பரப்பிரம்ம சொரூபமகவும் அவதூதரகவும் கோலம் கொண்டவர்.
(அவதூத நிலை என்பது எப்பொழுதும் இறை அனுபூதியில் திளைத்த நிர்வாண நிலை- இதற்கு பகவான் ரமண மஹரிஷி ஒரு உதாரணம் )

வியாசர் அவரின் கமண்டலம் , ஆசனம் மற்றும் யோகா தண்டம் ஆகியவற்றுடன் நடந்து கொண்டிருந்தார். சுக பிரம்மமோ ஆடை எதுவும் இல்லாமல் , முழுவதும் மழித்த தலை கைகளில் எந்த பொருளும் இல்லாத நிலையில் அவருடன் நடந்து கொண்டிருந்தார் அல்லது அவர் "உடல் நடந்தது" என்றும் சொல்லலாம்.

வழியில் ஒரு சிற்றோடை குறுகிட்டது , அதை கடக்க ஒரு சிறு பாலமும் இருந்தது.
ஆற்றில் சில பெண்கள் குளித்து கொண்டிர்ந்தார்கள்.
ஒருவர் மட்டுமே நடக்கும் வகையில் பாலம் இருந்ததால் முதலில் சுக பிரம்மத்தை கடக்க சொல்லி விட்டு பின்பு வியாசர் ஆற்றை கடந்தார்.

ஆடை எதுவும் இல்லாத நிலையில் ஒருவர் தங்களை கடந்து செல்வதை பார்த்த பெண்கள் இயல்பாக இருந்தார்கள். ஆனால் வியாசர் பாலத்தை கடக்கும் பொழுது தங்கள் கைகளாலும் சிலர் ஆடையாலும் தங்களை மூடி கொண்டனர்.

இதை கண்ட வியாசருக்கு குழப்பம் , இவர்கள் செய்யும் செய்கை நேர்மாறாக இருக்கிறதே என குழம்பினார்.

"மாலவனுக்கு படைக்கும் மலரை போன்ற மங்கையரே, நிர்வாண நிலையில் செல்லும் எனது தமயனை பார்த்து நாணம் அடையாத நீங்கள், என்னை பார்த்து உங்கள் உடலை மறைத்து கொண்டதன் மாயமென்ன? " என கேட்டார் வியாசர்.

அந்த மங்கையர்கள் தங்கள் உடலை மறைத்த வண்ணம் வியாசரை பார்த்து கூறினார்கள்..." முனிவரே , அவர் அனைத்தையும் துறந்தால் அவருக்கு நாங்கள் நாணம் அடைய வில்லை எங்களுக்கு அவர் அன்னியராக தெரியவில்லை. நாங்கள் அவரை எங்களுள் ஒருவராகவே பார்த்தோம்.

ஆனால் நீங்கள் ஆடை தரித்து உங்களுக்கு நாணம் மற்றும் பெற உணர்வுகள் உண்டு என வெளிப்படுத்துகிறீர்கள். மேலும் உங்கள் கைகளில் சில பொருட்கள் உங்களை பற்று உள்ளவராக காட்டுகிறது. இவ்வாறு இருக்க நாங்கள் நாணம் அடையாமல் இருக்க முடியுமா?" என கேட்டனர்.

வியாசர் தன் சுய தன்மையை உணர்ந்தார் . ஆற்றை கடந்து மறுபுறம் சென்றதும் தனது கமண்டலம், ஆசனம், ஆடை மற்றும் யோக தண்டத்தை ஆற்றில் எறிந்தார். தானும் ஒரு அவதூதரக மாறினார்.

தனக்கு இத்தகைய ஞானத்தை வழங்கிய மகளிரை கண்டார். அங்கு வெறும் சிற்றோடை மட்டுமே இருந்தது. மகளிராக வந்தது மகேசனே என மகிழ்ந்தார்.

இரு அவதூதர்களும் அத்மா ஞானத்துடன் பயணத்தை தொடர்த்தனர்.
________________________ஓம்_____________________________

உணருங்கள்...

வியாசர் தான் ஒரு மாமுனி என்றோ அல்லது வேதங்களை தொகுத்தவர் என்றோ ஆணவம் கொள்ளாமல் எளிய மக்களின் கருத்தையும் குரு வாக்காக எண்ணினார்.

பரமாத்மா எப்பொழுது , எந்த ஷணத்தில் நமக்கு மேன்மை அளிப்பார் என தெரியாது.

அனைத்து பொருளிலும் பரமாத்மா சொருபத்தை கண்டால், அனைத்தும் குருவாக இருந்து வழி நடத்தும்.

4 comments:

Ramesh said...

ஸ்வாமி ஓம்கார்,

if பகவான் ரமண மஹரிஷி was in அவதூத நிலை, why did he help foreigners only and did not take care of the downtrodden? (The hashish culture of his disciples is another big question, which I have witnessed personally!)

The effect of sanyasa attains greatness, if you can help the poor as Amma Amritanandamayi says.

Regards
Ramesh

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ரமேஷ் அவர்களுக்கு,

பகவன் ரமணமகரிஷியை பற்றி விமர்சிக்க அடியேனுக்கு தகுதி இல்லை. அங்கும் அப்படியே என நினைக்கிறேன்.

பரப்பிரம்ம ஞானிகள் என்றும் தங்களுக்கு பின் சிஷ்ய பரம்பரையை தொடர மாட்டர்கள். வியாச கதையில் கூறியதை போல சுக பிரம்மா ரிஷிக்கு சிஷ்யர்கள் இல்லை. இதற்கு காரணம் அவர்கள் அனைவரையும் அவர்களாகவே பார்க்கிறார்கள். தங்களை தவிர வேறு எதுவும் அவர்களுக்கு உணர்வு நிலையில் இல்லை. எனவே குரு சிஷ்ய வேறுபாடு அவர்களுக்கு கிடையாது.

சூரி நாகம்மா, குரம் சுப்புராமையா, குஞ்சு ஸ்வாமிகள், அண்ணாமலை சுவாமிகள் என பல அடியவர்கள் பகவானுடன் ஆனந்தமயமாக இருந்தவர்கள். வெளிநாட்டு காரர்கள் மட்டும் உங்கள் கண்களுக்கு தெரிந்தார்கள் போலும்? சாது சட்விக் தவிர வேறு மேலை நாட்டுக்காரர்கள் நிரந்தரமாக பகவானுடன் இருந்தது இல்லை.

ஞானி, யோகி, சுவாமி , சாது என ஆன்மீகத்தில் பல நிலை உண்டு. இது தான் சிறந்தது என கூற இயலாது. எனக்கு தெரிந்து இந்த நிமிடம் வரை ரமணரை தவிர வேறு யாவரும் அந்த நிலையை அடைந்த்து இல்லை. பூமியில் கடைசியாக வாழ்ந்த புத்தர் அவர் ஒருவரே.

Natarajan said...

Dear Mr. Ramesh:

Ramana Maharishi is the only true saint I have known in India. He never had the need to do propaganda through bulletins and media a la your Amma. He never went in search of diciples: Indians or foreigners: everyone came towards him. 90 % of the diciples are Indians. The simple loin cloth is the only dress he ever needed. If you denounce the greatest saint like him, I would say, your Amma should treat you for mental disorder. God bless you!Dr.K.Natarajan

Ramesh said...

I agree!