Friday, July 11, 2008

ஆன்மீக வைரம்

ஏழையான ஒரு சாதரண குடியானவனுக்கு செல்வந்தன் ஆகவேண்டும் என ஆசை. பணம் இல்லை என்றால் உலகில் மகிழ்ச்சி இல்லை என்பது இவனது சித்தாந்தம்.
இரவும் பகலும் உழைத்து செல்வம் சேர்த்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ஏங்கினான்.
ஒருநாள் இரவு தூங்க சென்றான். பணத்தை பற்றியே எண்ணி கொண்டிருந்ததால் கனவும் அதை பற்றியே வந்தது....

அந்த ஊரின் கோடியில் ஒரு ஆறு , அதன் அருகில் ஒரு ஆலமரம் . ஆலமரத்தின் அடியில் ஒரு முனிவர் அமர்த்திருந்தார். இவன் முனிவரின் முன்னால் பணிவுடன் நின்றிருந்தான் . தனது காவி துணியால் சுற்ற பட்ட மூட்டையிலிருந்து தேங்காய் அளவு உள்ள கண்களை கூசும் ஒளி கொண்ட வைரத்தை எடுத்து இவன் கையில் திணித்தார். இரு கைகளிலும் நிறைந்திருந்த அந்த வைரத்தை பரவசத்துடன் பார்த்தான்....

திடுக்கிட்டு விழித்தான் , மணி காலை 4 .
ஆண்டவா ...!அந்த வைரம் மட்டும் கிடைத்தால், எனது வாழ்க்கையே மாறிவிடுமே.

விடிய காலை கண்ட கனவு பலிக்கும் என்று சிலர் சொன்னது அவனுக்கு நினைவு வந்தது . மீண்டும் தூக்கம் வர வில்லை. எப்பொழுது விடியும் என காத்திருந்தான்....


சூரியன் கிழக்கில் உதித்ததும் .... இருப்பு கொள்ளாமல் ஆற்றங்கரை ஆலமரத்திடம் தேடலுடன் ஓடினான்..

அங்கே முனிவர் ஒருவர் காவி துணியால் சுற்றிய மூட்டையுடன் அமர்த்திருந்தார். இந்த காட்சியை அவனால் நம்பமுடியவில்லை.

அவர் அருகில் சென்றதும்..."குழந்தாய் வைரம் வாங்க வந்தாயா ? " என கேட்டார். வியப்புடன் அவன் மேலும் கீழும் தலை அசைக்க...

தனது மூட்டையில் இருந்து மிக பெரிய வைரத்தை எடுத்து கொடுத்தார்.

வாங்கியதும் தான் தாமதம் , மறு நிமிடம் விட்டிற்கு ஓடி வந்தான்,
யாருக்கும் கிடைக்காத பெரிய வைரம் தனக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான். இதை விற்று என்ன செயலாம் என திட்டமிடலானன்.

திடீரென அவனுக்குள் ஒரு வெறுமை பரவியது ....
மனதுக்குள் ஒரு குரல் சொல்லியது...

மாபெரும் மகிழ்ச்சியை வழங்கும் வைரத்தை
எந்த வருத்தமும் இல்லாமல் அந்த முனிவர் நமக்கு கொடுத்தார் என்றால்....

அவரிடம் இதை காட்டிலும்....விலைமதிக்க முடியாத ஒரு பொருள் இருந்தால் தானே வைரத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் கொடுக்க முடியும்?

முனிவரிடம் விலை மதிக்க முடியாத பொருள் என்னவாக இருக்கும்? அவரிடமே கேட்போமே

என மீண்டும் ஆற்றங்கரைக்கு சென்றான்..

ஒளி பொருந்திய முகத்துடன் முனிவர் அமர்த்திருந்தார். "வா குழந்தாய் , இந்த வைரத்தை காட்டிலும் என்னிடம் இருக்கும் விலை மதிக்க முடியாத பொருள் உனக்கு வேண்டுமா?"


"ஆம்" என்பதை போல தலை அசைத்தான்.

அவன் கையில் உள்ள வைரத்தை வங்கி ஆற்றில் எறிந்தார் குரு ....
தனது மூட்டையில் இருந்து காவி துணியை எடுத்து அவனிடம் கொடுத்துதார்..

"...குழந்தாய் .....நான் கண்ட பெரும் செல்லவதை உனக்கு காட்டுகிறேன் வா... என் பின்னால்...."

முனிவர் நடக்க அவரின் பின்னால் தொடர்ந்தான் "சிஷ்யன்".....


________________________ஓம்_____________________________

குரு எப்பொழுதும் சிஷ்யர்களை தேடி அலைவதில்லை...
பரம்பொருளே குருவை நோக்கி நம்மை அனுப்புகிறது.

பற்றுகள் வைப்பது தவறா தவறில்லையா என விவாதிப்பதை காட்டிலும்... நாம் நாமாக இருந்தால்...நமது பற்றுகளே பற்றற்றவனை நோக்கி கொண்டு செல்லும்.

-
ஸ்வாமி ஓம்கார்

5 comments:

தேடுதல் said...

சுவாமி ஒம்கார் அவர்களே!

உங்களைப் பற்றிய ப்ரோபைல் விளக்கம் ஆச்ச்ரியமாக உள்ளது.
வயது 108?! அப்படியா?

கதைகளுடன் ஆரம்பித்துள்ளீர்கள். மகிழ்ச்சி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு zorbathebuddha,

உங்கள் வருகைக்கு நன்றி.

எனது உடலுக்கு மட்டுமே வயதுண்டு. எனக்கு இல்லை.

வலைத்தளத்தில் அதிக பட்ச வருடம் 1900 என கொடுக்க பட்டிருந்தது.

மேலும் 108 கதைகள் எழுதும் எண்ணம் உள்ளது...

அவன் அருளால் அது நடக்கும் என நினைக்கிறேன்.

civayanama said...

சுவாமி அவர்களே . . .
கதை சொல்லி விளக்குவது என்பது பழைய மரபு. அது சிறப்பானதும் கூட . .

108 கதைகளுடன் நிறுத்தி விடாதீர்கள் . . .
பெரிய குழந்தைகளுக்கும் கதை பிடிக்கும்

ஆனால் காவி என்பதில் தான் சிறு இடறல்.

காரணம் காவி கடவுள் இல்லா கொள்கை கொண்ட பௌத்தத்திற்கு உரியது. . .
இருக்கட்டும் நல்ல கதைகளை எங்களுக்கு ஏற்றாற் போல் எடுத்துக் கொள்கிறோம்.

ஸ்வாமி ஓம்கார் said...

சிவயநம அவர்களே ,
தங்கள் வருகைக்கு நன்றி. கடவுளின் அருள் இருப்பின் எண்ணிலா கோடி எழுதும் எண்ணம் உண்டு,

காவி உடை பற்றி உங்கள் கருத்து எனக்கு புதியதாக இருந்தது.
ததத்ரேயர் முதல் பிரசன்ன பௌத்தர் அழைக்கப்பட்டவரும் , ஆதி குருவுமான ஆதி சங்கரர் அணிந்தும் கவி உடையே,

பௌத்த மதத்தில் காவி இருக்கலாம். சனாதன தர்மத்தில் இருந்து வந்த அனைத்து மதத்திலும் அதன் சுவடுகள் இருப்பது இயல்பு. தாயை போல சேய் இருக்கிறது என்பதால் சேயிடம் இருந்து தாய் கற்றுகொண்டால் என சொல்லலாகுமா...?

நாமக்கல் சிபி said...

இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது!