Sunday, October 26, 2008

ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறுகிறேன்

தியானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆஸ்ரமம் அது.


ஓர் தெய்வீகமான மெளனம் அங்கே சூழ்ந்திருந்தது. ஓர் கையை தலையிலும் தொடையிலும் வைத்தவண்ணம் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார் சத்குரு.

அவரது கண்கள் எங்கோ நிலைத்திருந்தது. அவரது உடல் அசைவற்று இருந்தது , அவர் சமாதி நிலையில் இருப்பதை காட்டியது.சத்குருவை பார்த்த படி அவரது சிஷ்யர்களும் மக்களும் அமர்ந்திருந்தனர்.

ஓர் இளைஞன் கைகளில் மலர் மாலை மற்றும் பழங்களுடன் அவர் முன் வந்து நின்றான்.
அவருக்கு மலர்மாலையை அணிவித்து அவரை விழுந்து வணங்கி கேட்டான் “குருவே என்னை உங்கள் சிஷ்யனாக ஏற்று எனக்கு சன்னியாசம் வழங்குங்கள்.”

தனது சமாதியிலிருந்து கலைந்த அவர், அவனை தீர்க்கமாக பார்த்தார். “உன்னிடத்தில் சன்னியாசத்திற்கான கூறு இல்லை.


முயற்சி செய் , அழ்ந்த முயற்சி உன்னை மேம்படுத்தும்” என சொல்லி அவனை பார்த்தார்.

அந்த இளைஞனோ விடுவதாக இல்லை. “அவ்வாறு சொல்லி என்னை தவிர்க்காதீர்கள். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்” என இரு கரம் கூப்பி தொழுதான்.

குரு புன்புறுவல் செய்தவாறே கூறினார்...“சரி உன்னை ஏற்றுக்கொள்கிறேன். சன்னியாசம் கொடுப்பதற்கு முன் நீ சிலகாலம் இங்கு இருந்து வா. உனது சன்னியாசம் கொடுக்கப்படும் நாளை பிறகு கூறுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை உண்டு. நீ யாருடனும் சைகையிலோ வாய் மூலமாகவோ பேச கூடாது. . மூன்று வருடத்திற்கு ஒரு முறை என்னிடம் மட்டும் பேசலாம். அதுவும் ஒரு வாக்கியம் தான். இதற்கு சம்மதித்தால் நீ இங்கு இருக்கலாம்”

தன்னை ஏற்று கொண்ட குருவை கண்கள் குளமாக தொழுது விட்டு தலையசைத்தான் இளைஞன்.

“மெளனி” என்ற எழுதபட்ட வாசகம் கழுத்தில் இருக்க ஆஸ்ரமத்தை வலம் வர துவங்கினான் அந்த இளைஞன்.

மூன்று வருடம் கழித்தது. குரு முன் வந்தமர்ந்தான்..

குரு அவனை நோக்கி கூறினார்..“..இன்று நீ பேசும் நாள். நீ பேச விரும்புவதை ஒரே வாக்கியத்தில் கூறு”

இளைஞன் கூறினான் ,“குருவே எனக்கு கொடுக்கப்பட்ட படுக்கை வசதி குறைவாக இருக்கிறது”.

குரு கூறினார், “ நன்று. உனது மெளனம் தொடரட்டும்”.
.
.
.
.
.
.
மீண்டும் மூன்று வருடம் கழித்தது. அந்த நாளும் வந்தது.

குரு அவனை நோக்கி கூறினார்..“..இன்று நீ பேசும் நாள். நீ பேச விரும்புவதை கூறு”

இளைஞன் கூறினான் ,“குருவே என்னை பிறர் சரியாக நடத்துவதில்லை”.

குரு கூறினார், “ நன்று. உனது மெளனம் தொடரட்டும்”.
.
.
.
.
.
.
.
.
.
மீண்டும் மூன்று வருடம் கழித்தது. அந்த நாளும் வந்தது.

குரு அவனை நோக்கி கூறினார்..“..இன்று நீ பேசும் நாள். நீ பேச விரும்புவதை கூறு”

இளைஞன் கூறினான் ,“குருவே எனக்கு ஆஸ்ரம வாழ்க்கை திருப்தி இல்லை. ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறுகிறேன்”.

குரு கூறினார், “ நன்று. உனது பயணம் தொடரட்டும்”.

--------------------------------ஓம்-------------------------------------
இக்கதை ஓர் ஜென் கதையை தழுவி சொல்லப்பட்டது.

தன்னில் அமைதியையும் உள்நிலையில் ஈடுபாட்டையும் காணாதவர்கள் ஆன்மீக வாழ்க்கையை தேர்ந்தெடுத்தல் தவறானது.

குரு சிஷ்ய உறவின் தெளிவையும், தான் எதற்காக இருக்கிறோம் என்ற இருப்பும் காண தவறுவதால் ஏற்படும் குறையே இதற்கு காரணம்.

இந்த குறைபாடு குரு சிஷ்ய உறவில் மட்டுமல்ல. அனைத்து வகையான உறவு முறையிலும் உண்டு.குரு சிஷ்யா நிலையில் கணவன் - மனைவி, தந்தை மகன், தலைவர் - பணியாள் என வேறு உறவு முறைகளை வைத்து இக்கதையை சிந்தித்துப்பாருங்கள். யாரை வைத்தாலும் அவர்கள் உறவில் வரும் தடுமாற்றத்தின் காரணம் யாரோ ஒருவர்

தனது இருப்பை உணராமல் தன் சுகத்தை மட்டுமே உணருகிறார்கள் என்பது தான்.

உங்கள் இருப்பை உணர்ந்து உள் நிலையைல் விழிப்புணர்வு பெருங்கள். அனைத்து உங்களுக்கு ஆனந்தமயமாக தெரியும்.

6 comments:

Anonymous said...

இந்த மாதிரி தலைப்பு வைத்து விளையாட்டு காட்டும் போதே தெரிகிறது.உங்களுடைய .... எல்லாம்!
“ ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறுகிறேன்” தயை கூர்ந்து எந்த ஆசிரமத்தில் இருந்தாலும் வெளியே போய் விடுங்கள் .இம்மாதிரியான சாமியார்கள்தான் இந்த மதத்துக்கே கேடு.என்பதை நான் உணர்கிறேன் .விளம்பரச் சாமியார்கள் என்றுமே மததிற்க்கு கேடு!.

கோவி.கண்ணன் said...

நல்ல கதை ! இருந்தாலும் குரு தன் முடிவில் உறுதியாக இருந்ததை ஏற்க முடியவில்லை.

//குரு சிஷ்யா நிலையில் கணவன் - மனைவி, தந்தை மகன், தலைவர் - பணியாள் என வேறு உறவு முறைகளை வைத்து இக்கதையை சிந்தித்துப்பாருங்கள். யாரை வைத்தாலும் அவர்கள் உறவில் வரும் தடுமாற்றத்தின் காரணம் யாரோ ஒருவர்
//

நட்பு, நண்பர்களுக்கிடையே என்பதையும் சேர்த்து இருக்கலாம்.

ஸ்வாமி ஓம்கார் said...

கடவுளும் அனானிகளும் ஒன்று போலும்,இருவருக்கும் பெயரில்லையே அதனால் கூறினேன்.

உங்கள் கருத்து சரியே.

இதை உணர்ந்ததால் தான் மதத்தையும் உங்கள் ”இந்து”வையும் விட்ட பிறகே ஆன்மீக வாழ்க்கைக்கு வந்தேன்.

நான் ஓர் மதத்தில் மட்டுமல்ல ஓர் ஜாதியில் இருப்பதற்கும் தகுதி அற்றவன்.

நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி. கண்ணன் அவர்களே...


ஒருவன் தன்னை குருவுக்கு அர்ப்பணிக்காத வரை குரு என்ன செய்ய முடியும்?


உங்கள் கருத்து சரியே. இரு உறவுகள் கொண்ட அனைத்து உறவிகளையும் இதில் இணைக்கலாம்.

கிரி said...

உண்மையான ஈடுபாடு இல்லாமல் ஆசை மட்டுமே இருந்தால் இந்த செயலையும் சிறப்பாக செய்ய முடியாது என்பதையே இது கூறுகிறது இல்லையா ஸ்வாமி!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கிரி,

சரியான தகவல் உங்களுக்கு கதை மூலம் கிடைத்திருக்கிறது.

உங்கள் கருத்து சரியே.