நகரத்தின் மையத்தில் உள்ள பொதுக்கூட்ட மைதானம்.
கண்களுக்கு எட்டிய வரை மக்கள் கூட்டம். மக்கள் அனைவரும் ஒருமுக சிந்தைனையுடன்அமர்ந்திருந்தனர். ஒரு புறம் சிறு குழுவாக பக்த்தர்கள் இசைத்த பஜனை பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருந்தது. அந்த மண்டபம் பூக்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேடையில் அலங்கார வளையம் மற்றும் மரத்தால் ஆன ஆசனம் என அனைத்து அம்சமும் ஒர் ஆன்மீக நிகழ்ச்சி நடைபெறப்போவதை குறித்தவண்ணம் இருந்தது.
ஆம். அனைவரும் சத்குரு ஞானேஷ்வர் வருகைக்காக காத்திருந்தனர்.
கூட்டத்தில் திடீரென சலசலப்பு. பின்பு அமைதி ஏற்பட்டது...
கூடியிருந்த கூட்டத்தின் நடுவே மக்கள் இருபுறமும் விலக ஓர் பாதை உருவானது..
சத்குரு தனது சிஷ்யர்களுடன் இரு புறமும் குழுமி இருந்த மக்களை வணங்கியபடியே மேடையை நோக்கி நடந்தார்.
பஜனை குழுவின் பாடல்கள் உச்சகட்டத்தை எட்டியது.
சிலர் அவர் கால்களை ஸ்பரிசிக்க முயன்றார்கள், சிலர் ஆவேசமாக அவரின் பெயரை உச்சரித்தனர்.
மேடையில் ஏறியதும் அனைவரையும் ஒருமுறை தனது ஞானம் நிறைந்த கண்களால் பார்த்தார்.
கூட்டம் அமைதியடைந்தது.
”எனது ஆன்மாவிற்கு அருகில் இருப்பவர்களே.....” என தொடங்கி தனது ஆன்மீக அருளுரையை துவங்க...அனைவரும் அதில் மூழ்கினர்.
ஒரு மணிநேரம் அங்கு யாரும் அசையக்கூட இல்லை. தனது ஆன்ம ஆற்றலாலும் , ஞான கருத்தாலும் மக்களை கட்டிவைத்தார் சத்குரு.
குருதேவரின் சிஷ்யர் ஒருவர் மக்களை பார்த்து கூறினார், “ சத்சங்கம் துவங்குகிறது, உங்களுக்கு சத்குருவிடம் கேட்க விரும்பும் கேள்வியை கேட்கலாம்”.
இதே நேரம் தேவலோகத்தில்.... கடவுள் இக்காட்சிகளை பார்த்துகொண்டிருந்தார்.
தன்னை பற்றி பேசும் ஆன்மீகவாதிக்கும், அதை கேட்டு ஆன்மீக வயப்பட்டிருக்கும் மக்களுக்கும் தனது திருக்காட்சியை ஏற்படுத்தும் வண்ணம் அவர்கள் முன் தோன்ற எண்ணினார்.
ஆன்மீகம் பற்றி, வாழ்வியல் பற்றி, தத்துவம் பற்றி என பல கேள்விகள் ஒவ்வொருவராக எழுந்து கேட்டார்கள். அனைத்துக்கும் சத்குரு ஞானேஷ்வர் புதிய புரிதலை ஏற்படுத்தும் கோணத்தில் பதில் அளித்துக்கொண்டிருந்தார்.
எளிய உடையில் வந்தால் அவர்களுக்கு குழப்பம் ஏற்படும் என எண்ணி அவர்கள் வழிபடும் வடிவிலேய தங்க கீடம், பட்டு பீதாம்பரம் அணித்து பரமத்மா மெல்ல நடந்து அந்த சபைக்கு நடுவே வந்தார்.
அனைவரின் கவனமும் அவரிடத்தில் திரும்பியது. அவர் மெல்ல நடந்து சத்குரு இருக்கும் மேடைக்கு அருகே வந்தார். அதற்குள் சத்குருவின் சிஷ்யர்கள் அவரை கூடி என்ன வேண்டும் என வினாவ தொடங்கினார்கள்.
பரமாத்மா புன்புறுவலுடன் கூறினார் ..”நான் கடவுள்”.
இதை கேட்ட சிஷ்யர்களும் மக்களும் கூக்குரலிட்டனர். அனைவரும் கூச்சலிடவே கைகளால் அமைதிப்படுத்திவிட்டு சத்குரு கடவுளை பார்த்தார்,
கடவுள் நம்பிக்கையுடன் சத்குருவை ஆழமாக பார்த்தார்.
சத்குரு சிஷ்யர்களை பார்த்து கூறினார்...”சத்சங்க்த்தின் நடுவே குழப்பம் விளைவிக்கும் இவரை கூட்டி சென்று எனது அறையில் அமரச்செய்யுங்கள்”
சிஷ்யர்கள் இருவர் கடவுளின் கைகளை பற்றி சத்குருவின் அறைக்கு அவரை கொண்டு சென்று அடைத்து வாயிற்கதவை சாத்தினார்கள்.
”சத்குருவிற்கு ஜெய்... சத்குருவிற்கு ஜெய்”
குழப்பம் விளைவித்தவரையும் மன்னித்துவிடும் சத்குருவின் தன்மையை கண்டு மக்கள் கோஷம் எழுப்ப துவங்கினர்.
சத்சங்கம் மீண்டும் துவங்கி மக்களுக்கு ஞானகருத்துகளை சத்குரு கூற துவங்கினார்.பின்பு மங்கள இசையுடன் சத்சங்க நிகழ்ச்சி நிறைவடைந்தது...
அந்த நகர பிரபலங்களும் பிரமுகர்களும் சத்குருவை காண வரிசையில் நின்றனர். ஆனால் சத்குரு இயல்புக்குமாறாக அனைவரையும் சந்திப்பதை தவிர்த்துவிட்டு தனது அறைக்கு திரும்புனார்.
சிஷ்யர்களை தனது அறைகதவை திறக்க சொல்லி அவர்களை வெளியே நிற்கசொன்னார்.
உள்ளே சென்ற வேகத்தில் அறைகதவை உற்புறமாக தாழிட்டு , அறுபட்ட மரம் போல் கடவுளின் காலில் விழுந்தார்.
தனது முகத்தை அவரின் கால்களில் புதைத்த வண்ணம் தழுதழுத்த குரலில் கூற துவங்கினார்...” பிரம்ம சொருபனே உங்களை பார்த்த உடனே கண்டுகொண்டேன். ஆனால் மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் தான் கடவுள் என தெரிந்திருந்தால்.. தனது வாழ்க்கைக்கு தேவையான சுயநல கருத்துக்களை கேட்க துவங்குவார்கள். உங்களுடன் இருக்கும் ஆனந்தத்தை பருக தயாரக இருக்கமாட்டார்கள். இந்த எளியவனை மன்னித்தருளும்...”
தனது வருகையின் தவறை உணர்ந்த கடவுள் மறைந்தார்...
-----------ஓம்------------
கோவில், மடாலயம் என எங்கும் குவியும் மக்கள் பெரும்பன்மையாக தனது வாழ்க்கையின் தேவை பூர்த்தி செய்யும் கோரிக்கை மனதில் கொண்டிருக்கிறார்கள்.
இந்த பிறப்பை வாழும் சூழ்நிலையை படைந்தவனுக்கு நன்றி சொல்லும் இயல்பு எங்கும் காணப்படுவதில்லை.
பிறருக்காக பரார்தனை செய்தல் என்பதும் குறைந்து வாருகிறது. தன்னை அறிதல் என்பதை காட்டிலும் தன் சுயநலத்தின்பால் மக்களுக்கு தேடல் அதிகம்.
சுயநலம் மிக மிக - கடவுளே எதிரில் வந்தாலும் நமக்கு பல சமயம் அவரை காணமுடிவதில்லை. வேண்டுதல் என்பது தனது வாழ்க்கையில் உள்ள சிறு சம்பவத்தை வேண்டுவதல்ல.
வேண்டுதல் என்பது அதனுடன் அதுவாகவே ஆக அதனிடத்தில் வேண்டுவதை குறிக்கும்.

16 comments:
//சுயநலம் மிக மிக - கடவுளே எதிரில் வந்தாலும் நமக்கு பல சமயம் அவரை காணமுடிவதில்லை. வேண்டுதல் என்பது தனது வாழ்க்கையில் உள்ள சிறு சம்பவத்தை வேண்டுவதல்ல. //
இதே கருத்தை வைத்து கட்டுரை எழுத இருந்தேன்...அதற்குள் எழுதிவிட்டீர்கள். அருமை.
கடவுள் இருந்தாலும் வரமாட்டார் என்று நம்புபவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.
திரு கோவி.கண்ணன் அவர்களுக்கு,
இந்த கதைக்கும் பின்னூட்ட பிள்ளையார் சுழி இட்டமைக்கு நன்றி.
உங்கள் தன்மைக்கு ஏற்ப இந்த கருத்தை உங்கள் வலைதளத்தில் காண ஆவலாக உள்ளேன்.
இந்த வலைதளம் ஆரம்ப நிலையில் உள்ளது, உங்களுக்கு என வலைதள ரசிகர்கள் இருக்கிறார்கள் எனவே நீங்கள் எழுதினால் அனைவருக்கும் இது சென்று சேரும்.
நன்றி.
/////ஆனால் மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள்
தான் கடவுள் என தெரிந்திருந்தால்.. தனது வாழ்க்கைக்கு தேவையான
சுயநல கருத்துக்களை கேட்க துவங்குவார்கள். உங்களுடன் இருக்கும்
ஆனந்தத்தை பருக தயாரக இருக்கமாட்டார்கள். இந்த எளியவனை
மன்னித்தருளும்...”////
நிதர்சனமான உண்மை.
நன்றாகச் சொல்லியுள்ளீர்கள் சுவாமிஜி
திரு சுப்பையா அவர்களுக்கு,
உங்கள் பாரட்டுக்கு நன்றி.
/*தனது முகத்தை அவரின் கால்களில் புதைத்த வண்ணம் தழுதழுத்த குரலில் கூற துவங்கினார்...” பிரம்ம சொருபனே உங்களை பார்த்த உடனே கண்டுகொண்டேன். ஆனால் மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் தான் கடவுள் என தெரிந்திருந்தால்.. தனது வாழ்க்கைக்கு தேவையான சுயநல கருத்துக்களை கேட்க துவங்குவார்கள். உங்களுடன் இருக்கும் ஆனந்தத்தை பருக தயாரக இருக்கமாட்டார்கள். இந்த எளியவனை மன்னித்தருளும்...”*/
ஏன் சாமி, அந்த குரு சுய நலம் இல்லாம இருந்திருந்தா, எல்லாருக்கும் ஞானம் வரும் படி கேட்டு இருக்கலாமே...
//ஏன் சாமி, அந்த குரு சுய நலம் இல்லாம இருந்திருந்தா, எல்லாருக்கும் ஞானம் வரும் படி கேட்டு இருக்கலாமே...//
தண்டனைக் குறைப்பு என்ற நடவடிக்கையில் கைதிகள் அனைவரையுமே விடுதலை செய்தால், தூக்கு தண்டனை கைதிகளையும் சேர்த்தே விடுவித்தால் பாதிக்கபட்டோர் மன அமைதி அடைவார்களா ?
எனது அருமை நையாண்டி நைனாவிற்கு,
உங்கள் கேள்வி உண்மையா அல்லது நையாண்டியா என தெரியவில்லை. இருந்த போதிலும் உண்மை என கருதி பதில் அளிக்கிறேன்.
ஞானம் என்பது கடை சரக்கல்ல எல்லோருக்கும் கொஞ்சம் கொடுங்கள் என கேட்பதற்கு.
அந்த குருவை விடுங்கள் அவர் சுயநலவாதி என்றே வைத்துக்கொள்வோம்.
கடவுள் அனைவரையும் ஞானத்துடனே படைக்க கூடாதா?
அது என்ன குரு கேட்டு பின்புதான் கடவுளுக்கு புத்தி வந்து அனைவருக்கும் ஞானம் வழங்க வேண்டுமா?
என் நண்பரே புரிந்து கொள்ளுங்கள் ...கடவுளாக இருந்தாலும் - குருவாக இருந்தாலும்...ஞானம் கொடுக்கும் சூழ்நிலையைதான் அமைத்து கொடுக்க முடியும். ஞானத்தை கொடுக்க முடியாது.
இதை தெரிந்துதான் (இ)அந்த குரு அவ்வாறு கேட்டார்.
சில போலிகள் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து அனைவரையும் ஞானமடைய செய்கிறோம் என்கிறார்கள். அது முடியாத காரியம். எந்த காலத்திலும் உலக மக்கள் அனைவரும் ஞான நிலையில் இருந்ததாக சரித்திரம் இல்லை. இனியும் இருக்காது.
ஞானம் அடைந்தவருக்கும் , அடைய அடைய போகும் ஒருவருக்கும் கால வித்தியாசம் வேண்டுமானால் இருக்கலாம். முடிவில் எல்லோரும் ஞானத்தை சுவைத்தே ஆகவேண்டும்.
திரு கோவி.கண்ணன் அவர்களுக்கு,
உங்கள் பதில் உண்மையிருந்தாலும்...
உதாரணத்திற்கு வேறு பயன்படுத்தி இருக்கலாம்.
அறியாமையில் இருப்பவர்கள் தண்டனை கைதிகள் அல்ல. கடவுள் தண்டனை வழங்கும் நிதிபதியும் அல்ல.
அனைவருக்கும் உணவு கொடுக்க சொல்லமுடியாது. பசி இருக்கும் நபருக்கு தான் உணவு என சொல்லிருந்தால் அழகாக இருந்திருக்குமோ?
//பிறருக்காக பரார்தனை செய்தல் என்பதும் குறைந்து வாருகிறது. //
உண்மைதான் ஐயா
இங்கு கடவுளைப் பற்றி ஆன்மாவைப் பற்றியெல்லாம் பதிவிடும் பதிவர் பலர் இருக்கின்ற்னர்.
நன்றி.
ஆனாலு ஈழதமிழர் பிரச்சனையைப் பற்றி பதிவுலகமே அதிர்ந்து கொண்டிருக்கையில்
ஓர் அன்பரைத் தவிர மற்றவர்கள் எவருமே இதனைக்
கண்டு கொண்டதாகவே காட்டிக்கொளதது மிகவும் மனவருத்தத்திகுரியதாகும்.
இவர்களும் ஈழத்தமிழருக்காக ஒரு பிரார்த்தனைப் பதிவு தானும்
இட்டிருந்தால் மிகமிக அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்.
ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பிரார்த்தனையை அருள்வீர்களா??????
நன்றி.
திரு அனானி அவர்களே,
பிரபஞ்ச உயிர்கள் அனைத்தும் சுகமாகவும், சாந்தியுடனும், பூரணத்திடன்னும் மங்களத்துடனும் இருக்கவேண்டும் என தினமும் வேண்டுகிறேன்.
இதில் தானே இலங்கையும் இருக்கிறது?
அகவே ப்ரார்தனை செய்வோம்.
/*தண்டனைக் குறைப்பு என்ற நடவடிக்கையில் கைதிகள் அனைவரையுமே விடுதலை செய்தால், தூக்கு தண்டனை கைதிகளையும் சேர்த்தே விடுவித்தால் பாதிக்கபட்டோர் மன அமைதி அடைவார்களா ?*/
ஏன் அண்ணா...
பரமனையும், பாமரனையும் ஒரே தட்டில் நிறுத்துகிறீர்கள்.
//நையாண்டி நைனா said...
ஏன் அண்ணா...
பரமனையும், பாமரனையும் ஒரே தட்டில் நிறுத்துகிறீர்கள்.
//
அது தவறு என்று உங்களுக்கே தெரிகிறதே. 50 சீட்டு உள்ள பேருந்தில் 10 பேர் டிக்கெட் எடுத்து இருந்தால் 10 பேரைத்தான் ஏற்றிச் செல்லும் மீதம் 40 சீட்டுகள் காலியாக இருக்கிறது என்பதற்காக இலவசமாக யாரையும் ஏற்றிச் செல்ல மாட்டார்களே ! முயற்சிப்பவர்களும், அதற்கான தகுதி உள்ளவர்கள் ஒன்றை பெருவதே சரியான வழிமுறை !
//அகவே ப்ரார்தனை செய்வோம்.//
உங்கள் அருளாசிகளை
வலைபூவின் இதழாம்
வலைப் பதிவில் பதிந்து
வானத்தினூடே
வையகமெங்கும் தூவிட
வேண்டுகிறேன்.
நன்றி ஐயா.
/*அது தவறு என்று உங்களுக்கே தெரிகிறதே. 50 சீட்டு உள்ள பேருந்தில் 10 பேர் டிக்கெட் எடுத்து இருந்தால் 10 பேரைத்தான் ஏற்றிச் செல்லும் மீதம் 40 சீட்டுகள் காலியாக இருக்கிறது என்பதற்காக இலவசமாக யாரையும் ஏற்றிச் செல்ல மாட்டார்களே ! முயற்சிப்பவர்களும், அதற்கான தகுதி உள்ளவர்கள் ஒன்றை பெருவதே சரியான வழிமுறை !*/
அப்படி என்றால், அந்த குருவின் முன்னே வந்து இருப்பவர்கள் ஞானத்தை தேடி வர வில்லையா?. அவர்களிடம் அந்த தேடல் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா?
எனது கேள்விக்கு பதில் கொடுத்திருக்கும் சாமி அவர்களுக்கு வணக்கம் மற்றும் நன்றிகள்.
...” பிரம்ம சொருபனே உங்களை பார்த்த உடனே கண்டுகொண்டேன். ஆனால் மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் தான் கடவுள் என தெரிந்திருந்தால்.. தனது வாழ்க்கைக்கு தேவையான சுயநல கருத்துக்களை கேட்க துவங்குவார்கள். உங்களுடன் இருக்கும் ஆனந்தத்தை பருக தயாரக இருக்கமாட்டார்கள். இந்த எளியவனை மன்னித்தருளும்...”
தனது வருகையின் தவறை உணர்ந்த கடவுள் மறைந்தார்...
//
உண்மையில் கடவுள் வந்திருந்தால் இது போல் நடந்திருக்கும். மக்களின் அறியாமையை நீக்குவது கடினம் தான். தேவைகளை பூர்த்தி செய்யவே கடவுளை மக்கள் நினைக்கிறhர்கள்.
உங்கள் ஆன்மீக அமுது இனிமையாக இருக்கிறது. இனி அடிக்கடி வருவேன்.
Post a Comment